எனக்கு இன்னும்
அனுமதி இல்லை..
வெளியுலகம் குறித்த
தகவல்கள்
அத்தனை திருப்தியாய் இல்லை..
என்றாவது ஒரு நாள்
நான்
தெருவில் காலடி
வைத்தே ஆகவேண்டும்..
ஏதேனும் ஒரு முகம் ...
ஒரு வார்த்தை ..
ஒரு நம்பிக்கை ..
என்னுள் விதைக்கப் பட்டால்
திரைச்சீலை மறைவில் நின்று
எட்டிப் பார்க்கும் தயக்கம் விட்டு
உங்களுடன் கை கோர்ப்பேன்..
யார் சொல்லப் போகிறீர்கள்
உங்களில் ஒருவர்..
அல்லது அதிகமான நபர்கள்..
'வா வெளியே ..
வந்தால்..
ஒன்று எங்களை சந்திப்பாய்..
அல்லது
உன்னால் தெருவிற்கு
ஒரு நம்பிக்கை வெளிச்சம் கிட்டும் என்று..'
சொல்லுங்கள் சீக்கிரம்..
என் பெற்றோர் என்னை வெளியே
அனுமதிக்க !
15 comments:
//ஒரு வார்த்தை ..
ஒரு நம்பிக்கை ..
என்னுள் விதைக்கப் பட்டால்
திரைச்சீலை மறைவில் நின்று
எட்டிப் பார்க்கும் தயக்கம் விட்டு
உங்களுடன் கை கோர்ப்பேன்..//
with hope super.
உன்னால் தெருவிற்கு
ஒரு நம்பிக்கை வெளிச்சம் கிட்டும் என்று..'
..... நிச்சயமாக.....
வெளியே வரவேண்டும் என்ற ஆசை வந்துவிட்டால் உலகமே உங்களை வரவேற்கும் தானே ?
//ஏதேனும் ஒரு முகம் ...
ஒரு வார்த்தை ..
ஒரு நம்பிக்கை ..
என்னுள் விதைக்கப் பட்டால்
//
நீங்களே விதைக்கப்பட்டிருக்கிறீர்கள்
நம்பிக்கையுடன் வாருங்கள்
அருமையான நடை
வாழ்த்துக்கள்
நல்ல கருத்து செறிவுள்ள கவிதை. இரு முறை படிக்கத் தூண்டிய கவிதை
விரைவில் திரைவிலக்கி எவருடனாகிலும் கைகோர்க்க வரட்டும்!
நல்லதொரு கவிதை ரிஷபன்.
உலகைப் பார்த்துப் பயப்படும் ஒரு உணர்வு.பயப்படாமல் வரணும்.
வெளியுலகத்
தகவல்
எப்படியிருப்பினும்
வருக.. வருக.
சாதாரண மனிதராக் இருந்தால் வெளியுலகம் காண பெற்றோர் அனுமதி மறுக்கப்போவதில்லை. ஏதோ வித்யாசமானவராக இருக்க்க்கூடும்.இவரின் பாதுகாப்பிற்கோ அல்லது வெளியுலகின் பாதுகாப்பிற்கோ தற்சமயம் திரைச்சீலை மறைவில் இவர். என்றாவது ஒரு நாள் என்ன, இன்றே அவர் தெருவில் காலடி வைக்கட்டும். அவரால் தெருவுக்கே ஒரு நம்பிக்கை வெளிச்சம் கிட்டட்டும். நம்பிக்கையை நாம் விதைப்போமே!
கடைசி வரி பஞ்ச் சூப்பர்!
நல்லா இருக்கு நண்பரே...
/////உன்னால் தெருவிற்கு
ஒரு நம்பிக்கை வெளிச்சம் கிட்டும் என்று..'/////
நம்பிக்கை புதுமைகள் பொங்கி வழிகிறது வார்த்தைகளில் .
என் பெற்றோர் என்னை வெளியே
அனுமதிக்க//
பெற்றோர் அனுமதிக்காக காத்து இருக்கும் பிள்ளை என்றுமே அற்புதமான பிள்ளை தான். அருமை ரிஷபன்... நீங்கள் வெளியேதான் நிற்கிறீர்கள் எங்களோடு
//பெற்றோர் அனுமதிக்காக காத்து இருக்கும் பிள்ளை என்றுமே அற்புதமான பிள்ளை தான்.//
ஆமாம் தேனம்மை; நானும் உங்களோடு.
எளிமையான வார்த்தைகள், நல்லா எழுதி இருக்கிங்க!
Post a Comment