நான் பார்த்தபோது
கடவுள் ஒரு சின்னப்பையனுடன்
விளையாடிக் கொண்டிருந்தார் ..
அரை டவுசரில்
அவரை எனக்கு
அடையாளம் தெரியவில்லை..
இன்னொரு பையன்
அவரைத் தனக்கு சமமாக நினைத்து
மழை நீரை காலால்
வீசிக் கொண்டிருந்தான்.
விளையாட்டு முடிந்து
திரும்பியபோது
கேட்டேன் ..
'என்ன இது விளையாட்டு?'
கடவுள் புன்னகைத்தார்..
'எவ்வித நிபந்தனைகள்..
பிரார்த்தனைகள் அற்ற
சூழல் எனக்கும்
அவ்வப்போது
வேண்டியிருக்கிறது.. '
என் கைவசம் இருந்த
வேண்டுதலை
அவர் அறியாமல்
கசக்கிப் போட்டு
கை குலுக்கி விட்டு
திரும்பினேன் !
18 comments:
//'எவ்வித நிபந்தனைகள்..
பிரார்த்தனைகள் அற்ற
சூழல் எனக்கும்
அவ்வப்போது
வேண்டியிருக்கிறது.//
அடடா!! குழந்தைமையில் கடவுள் அழகு.
அட்டகாசம்
ரிஷபன்.
உங்களுக்கு
ஒரு
பூந்தோட்டமேத்
தரணும்.
உண்மை கடவுளோடு கடவுளாய் இருக்கும் நிலையே உன்னதம் .
அழகா எழுதிருகீங்க ரிஷபன் .வழக்கம் போலவே .ரசித்து படித்தேன்
என் கைவசம் இருந்த
வேண்டுதலை
அவர் அறியாமல்
கசக்கிப் போட்டு
கை குலுக்கி விட்டு
திரும்பினேன் !
..... super!
You may enjoy reading this book: Mister God, This is Anna!
http://en.wikipedia.org/wiki/Mister_God,_This_Is_Anna
/'எவ்வித நிபந்தனைகள்..பிரார்த்தனைகள் அற்ற சூழல் எனக்கும் அவ்வப்போது வேண்டியிருக்கிறது.. 'என் கைவசம் இருந்த வேண்டுதலை அவர் அறியாமல் கசக்கிப் போட்டு கை குலுக்கி விட்டு திரும்பினேன் !/
அட அட! அபாரம் ரிஷபன். திரும்ப திரும்ப இதையேதான் சொன்னாலும் படைப்பும் அப்படியேதானே! படிச்சதும் ஒரு குதூகலம், அழுத்தம்னு இயல்பை மாத்திப் போடும் படைப்பு உசந்ததில்லையா?
அபாரமான ஒரு கவிதை. எதிர்பார்ப்புகள் இல்லாத பிரார்த்தனை வராதா என்ற ஆதங்கம் கடவுளுக்கும் இருக்கலாம்.
வெங்கட் நாகராஜ்
ஆனால் இந்தக் கவிதையைப் பாராட்ட வைத்திருந்த வார்த்தைகளை கசக்கிப் போட மனம் வரவில்லை. 'கிட்ட இருந்து நானும் கடவுளின் விளையாட்டை பார்த்தது போல இருந்தது!'
கடவுளோடு பல நேரங்கள் நாம் வசிக்கிறோம்.ஆனால் அத்தனை முறையும் கடவுளை நாம் அறிவதில்லை.எதிரில் மலர்ந்ததைத் தவற விட்டு குறிஞ்சிக்காக அலைகிறோம்.சபாஷ் ரிஷபன்!
ரிஷபன்....என்ன சொல்ல
இருக்கு.அன்பும் கள்ளமில்லா உள்ளமுமே கடவுள்.
கண்ட சந்தோஷம் உங்களுக்கு !
எனக்கு ?
கவிதை அழகான ஜாடிதான்,
படம் அதெற்கேற்ற மூடிதான்.
அபாரமா இருக்கு.
ரேகா ராகவன்
(சிகாகோவிலிருந்து)
அருமை ரிஷபன்.
கடவுள் என்னிடம் வந்தார்.ரிஷபனின் கவிதைகளில் நான் இருக்கிறேன், என்றார்!!
கண்டேன் கடவுளை
நானும்
தங்கள்
”சின்னப்பையன்”
வாயிலாக
kavithaiyil oru vasantham therinthathu!!!!!!!!!
சூப்பரப்பு !!
:)
நல்லாருக்குங்க.
அவரை எனக்கு
அடையாளம் தெரியவில்லை.. //
இந்த வரிகள் மட்டும் பொருந்தலைங்க.
ரெண்டு பிள்ளைகளுக்கு அம்மாவா (அம்பயரா) இருக்கிறதே கஷ்டமாத் தெரியுது சிலசமயம். கடவுளா இருக்கிறது நிஜமாவே கஷ்டம்தான்!! :-))
Post a Comment