May 15, 2010

காதலாகி...


இரு புறமும்

யூகங்களை

விதைத்துக் கொண்டே

போனார்கள்..

பின் முளைத்தெழுந்த

விருட்சங்களின் நிழலில்

ஒதுங்கியபோதுதான்

நாம் கண்டு பிடித்தோம்

நமக்குள் ஒளிந்திருந்த

நம் காதலை!


20 comments:

vasu balaji said...

ரிஷபன். இது வெறும் கவிதை வரிகளல்ல. நிதர்சனம். பெரும்பாலான காதல்கள் இப்படித்தான் ஆரம்பிக்கின்றன. பலே!

சுந்தர்ஜி said...

காதல் போலவே ஜாலம்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

உண்மை தான். காதல் நிறைவேறும் வரை, எல்லாமே வெறும் யூகங்களே!

அனு said...

உண்மைங்க...

க.பாலாசி said...

சிறப்பான கவிதைங்க ரிஷபன்... உள்வைத்த அர்த்தம் அருமை....

பா.ராஜாராம் said...

நல்லாருக்கு ரிஷபன். :-)

கே. பி. ஜனா... said...

cute and sweet!

ஹேமா said...

எம்மை அறியாமல் அன்போடு சேர்ந்து வளரும் இதுதான் காதலா !

Madumitha said...

சில சமயம்
யூகங்களைப்
பின் தொடர்ந்தால்
உண்மையின்
வாசலைத் தொட்டுவிடலாம்
போல.

கும்மாச்சி said...

ரிஷபன் வாழ்த்துகள்

Priya said...

கவிதை நல்லா இருக்கு ரிஷபன்!

க ரா said...

அருமை ரிஷபன்.

Thenammai Lakshmanan said...

வானம் பாடிகள் சொன்னதுதான் ரிஷபன்.. கவிதைஅருமை

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

காதல் என்று ஒன்று மட்டும் இல்லாவிட்டால், மண்ணுலகில் ஜீவ ராசிகள் வாழ்ந்து பயனில்லை, ரிஷபன்..
கவிதை நச்.

சிநேகிதன் அக்பர் said...

ரொம்ப நல்லாயிருக்கு ரிஷபன்

கமலேஷ் said...

கவிதை மிகவும் அழகாக இருக்கிறது நண்பரே...வாழ்த்துக்கள்...

priyamudanprabu said...

நல்லாருக்கு

வெங்கட் நாகராஜ் said...

உங்களது கவிதை வரிகள் நிதர்சனமான உண்மையை அழகாக சொல்லி இருக்கிறது.

வெங்கட் நாகராஜ்

VELU.G said...

நல்ல வேளை இப்பயாச்சும் கண்டுபிடிச்சீங்களே

நல்லாயிருக்குங்க

கா.பழனியப்பன் said...

உண்மை தலைவா