கருப்பு வெள்ளை படங்களில் தான் உயிரோட்டம் இருக்கிறது என்று நம்புகிற பலரில் நானும் ஒருவன்.
புகைப்படம் எடுக்க ஆரம்பித்த நாட்களில் அந்நாளைய மனிதர்களை கருப்பு வெள்ளையில் படம் பிடித்து வைத்திருப்பார்கள் .
இப்போது பார்த்தால் காலம் அதன் மேல் அழுத்தி வைத்த தடங்களும் சேர்ந்து அப்போது புலப்படாத அழகும் இப்போது தெரியும்!
அம்மா, அப்பா சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று இன்னொரு உறவினர் மூலம் கிடைத்தது. அப்பா அமர்ந்திருக்க அம்மா ஜம்மென்று அருகில் நிற்கிறார். இந்நாள் நவீன தொழில் நுட்பத்தில் மறு பிரதி எடுத்து (பழைய படம் அங்கங்கே சேதாரம் ஆகியிருந்தது ) லேமினேட் செய்து விட்டோம்.
எந்த உறவினர் வீட்டுக்கு போனாலும் இம்மாதிரி பழைய படங்கள் இருக்கிறதா என்று தேடிப் பார்த்து ரசிப்பது வழக்கமாகி விட்டது.
கல்லூரியில் எடுத்துக் கொண்ட குரூப் போட்டோ நாலு பக்கமும் கரையான் அரித்து முழுமையும் போனபோது (அப்போது பிரேம் செய்து மாட்டும் முன்புத்தி இல்லை) அந்த இழப்பு இன்னமும் வலியாய்..
கருப்பு வெள்ளையும் வண்ணங்களில் சேர்த்திதான் .. ஆனால் அப்படி சொன்னால் 'கலர் இல்லை' என்பது போல மனசுக்குள் ஏன் தோன்றுகிறது?!
25 comments:
//கருப்பு வெள்ளையும் வண்ணங்களில் சேர்த்திதான் .. ஆனால் அப்படி சொன்னால் 'கலர் இல்லை' என்பது போல மனசுக்குள் ஏன் தோன்றுகிறது?!
//
அப்படியே பழக்கமாகிவிட்டது
கருப்பு வெள்ளையும் வண்ணங்களில் சேர்த்திதான் .. ஆனால் அப்படி சொன்னால் 'கலர் இல்லை' என்பது போல மனசுக்குள் ஏன் தோன்றுகிறது?!
.......brain - eyes - illusion. :-)
பதில் என்னன்னு தெரியலைங்க..அப்படியே பழகினது ஒரு காரணமா இருக்கலாம்..
உண்மைதான் கருப்பு வெள்ளையில் இருக்கும் உயிர் மற்ற வண்ணப்படங்களில் குறைவுதான்...
கருப்பு வெள்ளையின் நேர்த்தியும் தெளிவும் முழு வண்ணப்படங்களில் இல்லைங்க!
--
உலகத்திலயே பெரிய கண்ணாடி மாட்டிகிட்டு சித்ரா டீச்சர் விளக்கம் கொடுத்துருக்காங்க பாருங்க! :)))
உணமைதான் நண்பரே..
நானும் கறூப்பு வெள்ளையின் ரசிகை ரிஷபன்..:))
அருமை ரிஷபன். கருப்பு வெள்ளை என்றைக்குமே தனித்துவம்.
கருப்பு வெள்ளை ஏன் கலரில் சேர்க்கவில்லை. ஒர் வேளை. கருப்பு வெள்ளை டிவி. கலர் டிவி என்று சிறுவயது முதலே பிரித்துப்பார்த்ததால் இருக்குமோ.
காலத்தின் கறுப்பு வெள்ளைத் தடங்கள் கம்பீரமானவை! - கே.பி.ஜனா
காலத்தின் கறுப்பு வெள்ளைத் தடங்கள் கம்பீரமானவை! - கே.பி.ஜனா
black & white always best.
we can create a lively attraction.
எனக்கும் கருப்பு வெள்ளைதான் பிடிக்கும்.
உண்மை தான், கறுப்பு - வெள்ளையின் கவர்ச்சி colourஇல் இருப்பதில்லை தான்!
உண்மைதாங்க.
YOU ARE CORRECT... I'M ALSO LIKE BLACK & WHITE GOOD POST
எனக்கும் கருப்பு வெள்ளை படங்கள் என்றால் மிகவும் விருப்பம் இன்று முதல் . அருமை . பகிர்வுக்கு நன்றி
அட இது யாருப்பா சித்ரா டீச்சரா எம்மாம் பெரியக்கண்ணாடி அம்மாடியோ !
இப்போதும் சிலர் கருப்பு
வெள்ளைப் படங்களை விரும்பி எடுத்துக்கொள்கிறார்கள்.
எனக்கும் பிடிக்கும்.
என்னதான் வண்ண வண்ணமாக புகைப்படங்கள் எடுத்து வைத்தாலும், கருப்பு-வெள்ளை படங்களில் இருக்கும் நேர்த்தியும், அழகும் கிடைப்பதில்லை. என்னுடைய பிள்ளைப்பருவத்தில் எடுத்த ஒரே புகைப்படம் கருப்பு வெள்ளையில். இன்னமும் பத்திரமாக இருக்கிறது.
இனிய பகிர்வு.
நிறங்களில் கறுப்பும் வெள்ளையும்தான் எதிரெதிர் துருவங்கள்.இரண்டும் இணையும்போது எதிலும் கிடைக்காத ஆன்மா அதில் கிடைத்துவிடுகிறது.
பார்க்கிற "கண்கள்" கருப்பு வெள்ளை தானே!
கருப்பு வெள்ளை பிடித்தவர்கள் நல்ல அனுபவசாலிகள்.
அப்படியானால் கலர் தேடி அலைபவர்கள்?
அவர்களும் அனுபவத்த பிறகு, கருப்போ, வெளுப்போ, கலரோ எல்லாம் விஷயம் ஒன்று தான் என்ற அனுபவ ஞானத்திற்கு வரக்கூடும் என்று நினைக்கிறேன்.
கருப்பு,வெள்ளைப் படத்தில் தான் ரியலிட்டி கிடைக்கும்!
ரிஷபன் ஒங்க டெம்ப்ளேட் out of focusல இருக்கு.வேற தேர்ந்தெடுங்க.
பழசெல்லாம்தானே இப்ப ஃபேஷனா திரும்பி வருது; நானும் ஓல்ட் ஆகத்தொடங்கியவுடந்தான் Old is gold னு புரிய ஆரம்பிச்சிருக்கு, அதான்!! :-)))))
சில புகைப்படக்காரர்கள் (கறுப்பு வெள்ளை அல்லாத) கலரில் படம் எடுப்பதை விட, கறுப்பு வெள்ளையில் எடுப்பதையே விரும்புவார்கள்; காரணம், நிறங்கள், உணர்ச்சிகளை, படங்கள் சொல்ல வரும் செய்தியை அழுத்தமாகச் சொல்லவிடாமல் படத்தை ஆக்கிரமித்துக் கொள்ளும் என்று!! இயக்குனர் பாலசந்தர் கறுப்பு-வெள்ளை படங்களையே அதிகம் இயக்கிய(விரும்பிய)தும் இந்தக் காரணத்தாலேயே என்று கேள்வி!!
///கருப்பு வெள்ளையும் வண்ணங்களில் சேர்த்திதான் .. ஆனால் அப்படி சொன்னால் 'கலர் இல்லை' என்பது போல மனசுக்குள் ஏன் தோன்றுகிறது?!/////
உண்மையிலேயே தெரியவில்லையா அல்லது வியக்கிறீர்களா ??
எப்படியிருப்பினும் ......புகைப்படங்களும், திரைப்படங்களும் நமக்கு கருப்பு வெள்ளையாக அறிமுகமாகி ....பல காலம் கருப்பு வெள்ளை என்ற வார்த்தை தாங்கி. புழங்கி.....நீண்ட காலத்துக்குப் பிறகு புதிய வண்ணங்களின் சேர்க்கை பெற்றன.
புதிய வண்ணங்கள் பலவாக இருக்கும்போது அதற்கு தனிப்பெயர் இல்லை ...பொதுவாக கலர்.
இன்னும் இவற்றை நாம் பிரித்துப்பார்க்க நாம் இந்த வார்த்தைகளையே பயன்படுத்தும் கட்டாயத்தில் இருக்கிறோம்.
உங்கள் பதிவு மூலம் உங்களை கவர்ந்த படங்கள் என வித்தியாசப்படுத்த வேறு வார்த்தைகள் உபயோகிக்க முடியாது.
இது பழகு தமிழ் அன்றி வேறொன்றுமில்லை
Post a Comment