October 13, 2011

பலம்












வாழ்ந்ததின்


தடயங்கள்


அனைத்தையும்


அழித்துப் போனது


கால வெள்ளம் ..


மீண்டும் துளிர்த்தது


உனக்கும் எனக்குமான


காதல்..


வானமே


நம் கூரையாய் ..


நட்சத்திர தோழமை


தரும்


ஆதரவின் பலத்தில் !








19 comments:

Yaathoramani.blogspot.com said...

அருமை அருமை
காதலின் பலமே அதுதானே
அதனால்தானே காதல் வெல்ல
காலம் தோற்றுப் போகிறது
அருமையான படைப்பு
தொடர வாழ்த்துக்கள்

ஷைலஜா said...

தோழமையின் அர்த்தமே இந்த பலம்தானே? பலே கவிதை ரி!

KParthasarathi said...

மேல் உலகத்தில் ஒன்று சேர்ந்த தம்பதிகளின் அல்லது காதலர்களின் மீண்டும் துளிர்த்த காதல் என்ற எண்ணுகிறேன்

Anonymous said...

மீண்டும் துளிர்த்ததற்கு என் வாழ்த்துக்கள்!

வை.கோபாலகிருஷ்ணன் said...

காதல் என்பதே ஒரு யானை பலம் அல்லவா!

அருமையான “பலம்”.
பலமான கவிதை
வாழ்த்துக்கள்.

3 in Tamilmanam &
3 in Indli also vgk

settaikkaran said...

//நட்சத்திர தோழமை
தரும்
ஆதரவின் பலத்தில் !//

ம்! எண்ணற்ற உதிரிக்கட்சிகளின் கூட்டணியா?
வெற்றி நிச்சயம்! :-)

பத்மநாபன் said...

நட்சத்திர தோழமை....நட்சத்திர வார்த்தை...பலமான கவிதை...

வெங்கட் நாகராஜ் said...

அருமையான கவிதை...

படமும் அருமை...

middleclassmadhavi said...

படிக்கப் படிக்க விதவிதமான அர்த்தங்கள் தோன்றுகின்றன... பகிர்வுக்கு நன்றி!

Unknown said...

நம்பிக்கைதான் வாழ்க்கை.

இராஜராஜேஸ்வரி said...

கால வெள்ளம் ..


மீண்டும் துளிர்த்தது


அழகான கவிதை.

கீதமஞ்சரி said...

காதல்கள் வெற்றி பெற பரும் பங்கு வகிப்பவை தோழமைக்கரங்கள்தானே? அருமையான கவிதை.

மோகன்ஜி said...

படத்திலேயே ஒரு கவிதை....கவிதையிலேயே ஒரு சித்திரம்.
ரிஷபன் சார்.. ஒரு கிஸ்ஸடிச்சிக்கவா?

ஸாதிகா said...

படமும் கவிதையும் போட்டிப்போட்டுகொண்டு படிப்போரின் உள்ளத்தைக்கவர்ந்தன.

கவி அழகன் said...

தொட தொட மலர்வதென்ன தொட்டவனை மறந்ததென்ன

மீண்டும் காதல் துளிர் அருமை

நிலாமகள் said...

வானமே
நம் கூரையாய் ..
நட்சத்திர தோழமை
தரும்
ஆதரவின் பலத்தில் !//

ம‌றுப‌டி துளிர்க்கும் குதூக‌ல‌ம்!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

சத்யமான வரிகள் ஒரு மெல்லிய கவிதையாய் பூக்க....

மாலதி said...

அருமையான படைப்பு
தொடர வாழ்த்துக்கள்

Aathira mullai said...

காலம்தான் மன வேறுபாட்டை மாற்றும் மா மருந்து. நச் கவிதை.அருமை..