நீருக்குள்
மூச்சு திணறிய
மீனாகி விட்டதென்
வாழ்க்கை.
காற்றில்லா நேரம்
பறக்க முயன்றேன்..
கவலைகளை
தலையணை உறைக்குள்
அடைத்து வைத்து
உறங்கிப் போன
என் புத்திக்கு
புரியவில்லை ...
கால்களைக் கட்டிக் கொண்டு
பந்தயத்தில்
பெயர் கொடுத்தபோது
கற்று தர ஏதுமில்லை
இந்த பிரபஞ்சத்தில் ...
20 comments:
அருமையான கவிதை.
/கால்களைக் கட்டிக் கொண்டு
பந்தயத்தில்
பெயர் கொடுத்தபோது/
சிந்திக்க வைக்கின்றன வரிகள்!
//கால்களைக் கட்டிக் கொண்டு
பந்தயத்தில்
பெயர் கொடுத்தபோது
கற்று தர ஏதுமில்லை
இந்த பிரபஞ்சத்தில் ...//
அருமையாக உள்ளது. பாராட்டுக்கள்.
பிடித்த வரிகளை சொல்லலாம் என்று நினைத்தால், கவிதையின் அத்தனை வரிகளுமே என்னை இழுத்தணைத்து கட்டிக் கொண்டு விட்டது!
நறுக்கென்ற ஒரு படைப்பு .. வாழ்த்துக்கள்
என் புத்திக்கு
புரியவில்லை ...
கால்களைக் கட்டிக் கொண்டு
பந்தயத்தில்
பெயர் கொடுத்தபோது
கற்று தர ஏதுமில்லை
இந்த பிரபஞ்சத்தில் ...//
மிகச் சிறந்த ஆக்கம் மாறுபட்ட கோணம்
கற்று தர ஏதுமில்லை
இந்த பிரபஞ்சத்தில் ..
"வாழ்க்கை" !!!!!!!
மனதில் ஒட்டிக் கொண்டது கவிதை. அருமை.
ஏற்ற வார்த்தைகள் என்ன அமரிக்கையாக சொல்லிவிட்டன இதய ஓட்டத்தை!
//கால்களைக் கட்டிக் கொண்டு
பந்தயத்தில்
பெயர் கொடுத்தபோது
கற்று தர ஏதுமில்லை
இந்த பிரபஞ்சத்தில்//
அருமையான வரிகள்..
கற்றுக்கொள்ளத் தயாராக இல்லாதவர்களுக்கு என்னத்தைக் கற்றுக்கொடுத்து விட முடியும்?..
கவிதை. அருமை.
கவலைகளைத் தலையணை உறைக்குள் அடைக்கும் வரிகளும், நீருக்குள் மூச்சுத் திணறும் மீனும், கற்றுத் தர ஏதுமில்லா பிரபஞ்சமும்,...அருமை.
சாதகமான சூழலைத் தவறவிட்ட ஒரு மனத்தின் அங்கலாய்ப்பை அணி செய்கிறது, ஒவ்வொரு உதாரணமும்..!நீருக்குள் மூச்சுத் திணறும் மீன், கால்களை கட்டிக்கொண்டு பந்தயத்திற்கு பெயர்கொடுக்கும் நிலை.. ரசிக்க வைக்கிறது..!
அருமை.
மயிலப் பிடிச்சு காலை ஒடைச்சி ஆட சொல்கிற உலகம் போல்
உங்கள் கவிதையும் ஒரு அழகான கவிதை ஓவியம்!
வாழ்க்கையின் சூட்சுமத்தை அழகாய் விளக்கிச்சொல்லிவிடுகின்றன கவிதைக்குள் பொதிந்திருக்கும் உவமான உவமேயங்கள். மனம் தொட்டக் கவிதைக்குப் பாராட்டுகள் ரிஷபன் சார்.
கண்ணைக் கட்டிவிட்டு நட என்றால்
முயன்றாவது பார்கலாம்.
காலைக் கட்டிவிட்டு ஓடு என்றால்
என்ன செய்வது?
கவிதை அருமை!
Beautiful!!
கால்களைக் கட்டிக் கொண்டு
பந்தயத்தில்
பெயர் கொடுத்தபோது
கற்று தர ஏதுமில்லை
இந்த பிரபஞ்சத்தில் ...
கவலைகளைத் தலையணை உறைக்குள் அடக்கி வைத்தால் கரடு முரடாக உறுத்தி தூக்கத்தைக் கெடுக்காமலிருக்குமா.... வரிகள் காட்டும் பரிமாணங்கள் வேறு வேறாய் பரந்து விரிய... ஆழ்ந்த மறு வாசிப்புக்குள் அமிழ்கிறது மனம்.
அவை வரிகள் இல்லை....வலிகள்...
Post a Comment