December 07, 2009

சித்தப்பா

அப்பா, அம்மா பற்றிஎல்லோரும்
கவிதைஎழுதி விட்டார்கள்.
அப்பாவின் பிரியம் கண்டிப்புடன்..
சித்தப்பாவோ எவ்விதநிபந்தனைகளுமற்ற
பிரியம் காட்டினார்..
அப்பா நிராகரித்த சினிமாக்களை
சித்தப்பாதான் அழைத்துப் போனார்.
பிடித்த பெல்பாட்டம் பேண்ட்டும்
அவர் வாங்கித் தந்ததுதான்.
சங்கரவிலாஸ் ஸ்பெஷல் ரவா
அவரால்தான் அறிமுகம்.
பைக் ஓட்டியதும் முதல் சிகரெட்டும்
அவர் கொடுத்ததுதான்.
திருடக் கற்றுக் கொண்டதும்
அவர் பர்ஸில்தான்.
காதலை அவரிடம்தான்
முதலில்சொல்ல முடிந்தது.
பெற்றோர் பார்த்த பெண்ணை மணந்து
இன்றுநானும் ஒரு தகப்பனாய் நிற்கையில்
தன் சித்தப்பனோடு நிற்கும்
என் மகனைப் பார்க்கையில்
அடி வயிற்றில் கலவரம்.
'எந்த அளவு எல்லை மீறியிருக்கிறான்?'

13 comments:

Paleo God said...

நன்றாக இருக்கிறது ரிஷபன்

//ஒரு தகப்பனாய் நிற்கையில்தன்
சித்தப்பனோடு நிற்கும்என் மகனைப்
பார்க்கையில் அடி வயிற்றில்
கலவரம்.'எந்த அளவு எல்லை
மீறியிருக்கிறான்?'//

ரசித்தேன்..

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

எனக்கும் என் சித்தப்பா ஞாபகம் வந்து
விட்டது. நம் நினைவலைகளை வரி
வடிவில் காண்பது என்பது ரிஷபனிடமே
சாத்யம்!

கமலேஷ் said...

இன்னுமொரு சொல்ல மறந்த கதையா
நல்ல முயற்சி..

Chitra said...

என் மகனைப் பார்க்கையில்
அடி வயிற்றில் கலவரம்.
'எந்த அளவு எல்லை மீறியிருக்கிறான்?'

........கொடுத்து வைத்த மகன். அப்பா ரசித்து செய்த சேஷ்டைகள் செய்ய மகனுக்கும் ஒரு வாய்ப்பு, சித்தப்பா மூலம். விடுங்க சார், நீங்க உருப்பட்டு முன்னேறியது போல் அவனும் பொறுப்புடன் வந்து விடுவான். இந்த லீலைகள் தொடர, அவன் மகனுக்கு சித்தப்பா முறைக்கு வழி பண்ணிட்டீங்களா ......

ரிஷபன் said...

பலா பட்டறை, ஆரண்யநிவாஸ்,கமலேஷ், சித்ரா.. நீங்கள் தருவது உற்சாக டானிக்..

லெமூரியன்... said...

மிக அருமையான கவிதை...
பொதுவாக நம்மில் பலருக்கும் கிட்டும் அதே சுதந்திரத்துடன் கூடிய அதிகமான அன்பு சித்தப்பாவிடம் இருந்து.....

\\தன் சித்தப்பனோடு நிற்கும்
என் மகனைப் பார்க்கையில்
அடி வயிற்றில் கலவரம்.
'எந்த அளவு எல்லை மீறியிருக்கிறான்?'.....//

ஹா ஹா ஹா.......மிகவும் ரசித்து சிரித்து மகிழ்ந்த வரிகள்.....

என் நடை பாதையில்(ராம்) said...

சூப்பர்! முதல் முறையாக சித்தப்பாவிற்கு கவிதை எழுதியவர் நீங்களாகத்தான் இருக்கும்.

கிருபாநந்தினி said...

ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே... பாடணும்போல இருக்கு!

Vidhoosh said...

:))
super

-vidhya

word verification???????????????????

ரிஷபன் said...

விதூஷ் வேர்ட் வெரிபிகேஷனை எடுத்து விட்டேன்..

ரிஷபன் said...

ராம்.. தஞ்சாவூர் கவிராயர் கூட இந்தக் கவிதையை மிகவும் பாராட்டினார்.. சித்தப்பா பற்றி எழுதியதற்காக..

kavya said...

ரசிக்கும்படியான கவிதை....

Ananthasayanam T said...

சித்தப்பா
சித்த அப்பா போல் இருக்கும் சிரித்தவாய் சித்தர்
சினிமாவுக்கெல்லாம் அழைத்துச் செல்வார்
செல்லமாய் கேசரியும் பக்கோடாவும் வாங்கித் தருவார்
தப்புக்கள் செய்த போதும் மாட்டிவிடாமல் கண்டித்து சிரிப்பார்
யோசிக்கவே தோன்றியதில்லை தூரங்கள் இருந்ததில்லை
எதையும் எப்போதும் அவரிடம் சொல்லவோ மறைக்கவோ..
காதலை சொன்னபோது காதலியிடம் தயக்கம் இருந்ததுண்டு ஆனால்
சித்தப்பாவிடம் சொன்னபோது சப்தம் வெளிவராமல் சேர்த்துவைத்தார்..

சந்தோஷம் பொங்கியதும் துணைவிக்கும் துணை சேர்ந்ததும்
தொடர வழியின்றி அவர் காலனை சேர்ந்ததும்
எல்லாம் இப்போது போலே தெரிந்தும்
இருக்கின்ற
ஒரு மகன் நேற்றொரு பெண்ணுடன் பேசியது பார்க்கையில்
என் தம்பியை நினைத்தால் ஏன் பயம் என்று தான் புரியவில்லை