குழந்தைகளைக் கவனிக்காதீர்கள்!
பயணத்தில்..பக்கத்து வீட்டில்..
ஏதேனும் ஒரு குழந்தைகவனம் ஈர்க்கிறது.
சின்னச் சிரிப்பால்..மழலையால்..
எதிர்பாராத ஸ்பரிசத்தால்..
தொலைத்துவிட்ட குழந்தைப் பருவம்
உள் மனசுள் உறுத்த கை நீள்கிறது
குழந்தையைப் பற்ற..
அடிமனதில் ஒரு எச்சரிக்கையும்..
'வேண்டாம்.. விட்டு விடு'
இத்தனை காலம் சேகரித்த
விஷம் பரவிய உடம்புடன்
'தொடாதே குழந்தையை'
அது அதன் போக்கில் இருக்கட்டும்.
'அழிப்பான்' போல
நாக்கும்கைகளும் இருக்கும்வரை..
எந்தக் குழந்தையையும்கவனிக்கக் கூடாது..
இப்படிக்கு -
தொலைத்துவிட்டகுழந்தைமையின் சார்பில்.
8 comments:
/*விஷம் பரவிய உடம்புடன்
'தொடாதே குழந்தையை'
அது அதன் போக்கில் இருக்கட்டும்.*/ என்னால ஏத்துக்க முடியல ரிஷபன்.
மாத்தி யோசி???
நானும் சேர்ந்து கொள்கிறேன் உங்களோடு,
தொலைத்து விட்ட குழந்தைமை சங்க மெம்பராக...
என்னாலயும் ஏத்துக்க முடியல.. ராம் அதனாலதான் அந்தக் கவிதை.. அது வாங்கின அடி.. அதோட வயசுக்கு மீறிய வசவுகள்.. என்னை என்ன செய்யச் சொல்றீங்க..
கலையரசன்.. மாத்திதான் யோசிக்கணும்.. யூ ஆர் கரெக்ட்!
ஜனா.. நாம தொலைக்கல.. தொலைச்ச கொஞ்ச பேரைப் பார்க்கும்போது பொங்கின மனசு..
பாசம் நிறைந்த மனம் பதறியதால், வந்து விழுந்த கவிதை கனல்
இப்போது எந்த குழந்தை தான் 'குழந்தைமை'யோடு இருக்கிறது!
எல்லாமே 'செல்லுலாய்டு மௌல்டு'கள் தான்!!
//'வேண்டாம்.. விட்டு விடு' இத்தனை காலம் சேகரித்த விஷம் பரவிய உடம்புடன் 'தொடாதே குழந்தையை' அது அதன் போக்கில் இருக்கட்டும்//
என்ன செய்ய நாம் உண்ட விஷங்கள் குழந்தை என்ற அமுதம் பெற்ற பின்னும் நம்மாலேயே (விஷம்) ஊட்டி விடப்படுகிறதுதான் (பல சமயம் தெரியாமலே) நடந்து விடுகிறது. ATLEAST உங்கள் கவிதை ஒரு எச்சரிக்கை பலகையாக இருந்து விடட்டும்.
கவிதை எச்சரிக்கிறது.குழந்தைகளை நாம் அக்கறையோடு கவனித்துக்கொண்டாலும் அவர்களிடம் சட்டாம்பிள்ளையாக இல்லாமல் ஓரளவு விட்டுப் பிடித்தலே நல்லது.எங்களுக்கும் அனுபவம் இருக்கல்லவா !
Post a Comment