December 19, 2009

ம்

ஒரு எழுத்தை
கவிதையாக்க
உன்னால்தான்
முடிகிறது..
"ம்"
நீ ஒவ்வொரு முறை
"ம்" கொட்டும்போதும்
எனக்குள் அடிக்கிறது
என் சின்ன இதயம்
சந்தோஷத்தால் ..
உன் ஒரு பார்வை
என்னைக்
புரட்டி போட்டது ..
உன் ஒரு "ம்"
என்னை
இறுக்கிக் கட்டியது..
நீ இனி எப்போது
"ம்" சொல்வாய் என்று
உன் உதடுகளைப்
பார்த்தேன்
நீ சொன்ன "ம்" கேட்காமல்
எனக்குள் நானே
தொலைந்து போனேன் ..

12 comments:

என் நடை பாதையில்(ராம்) said...

ம்ம்ம்ம்ம்ம்ம்ம் சூப்பர்

Rekha raghavan said...

"ம்" உங்களுக்கு என்னமா கவிதை பிச்சுக்கிட்டு வருது. "ம்" நானும் இருக்கேனே!

ரேகா ராகவன்.

Chitra said...

"ம்" என்றால் சொர்க்கமோ? . "ம்" இல்லை என்றால், நரகமோ?
நல்ல கவிதை, ரிஷபன் சார்.

சிவாஜி சங்கர் said...

"ம்"தொடருங்கள்..

கே. பி. ஜனா... said...

ஒரு எழுத்தை
கவிதையாக்க
உங்களால் தான்
முடிகிறது...

Thenammai Lakshmanan said...

ரிஷபன் ஒரு சின்ன "அட "போட வைக்கிறது உங்க "ம்"

Paleo God said...

நல்லா இருக்குங்க ரிஷபன் ... வாழ்த்துக்கள். :))

கிருபாநந்தினி said...

ம்... ம்..!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

ம்...நன்றாகத் தான் இருக்கிறது

வெங்கட் நாகராஜ் said...

அன்புள்ள ரிஷபன்,

ம்.... ஒரு எழுத்து கவிதை! எனக்கு பல எழுத்துக்களை வெச்சே கவிதை எழுத தெரியலையே... என்ன பண்றது. நல்ல பதிவு. தொடரட்டு[ம்]....

வெங்கட் நாகராஜ்
புது தில்லி

R. Jagannathan said...

Just read 'm'having missed it earlier - expressed beautifully. - R. Jagannathan

திவ்யாஹரி said...

"ம்" சொன்னதுக்கே இவ்ளோ கவிதையா? அவங்க பேச ஆரம்பிச்சா 4 ,5 வலைத்தளம் open பண்ணுவிங்கன்னு நெனக்கிறேன்.. நடத்துங்க..