"இங்கே பாரேன்"
"பேச மாட்டியா"
"தப்புத்தான். ஆனா வேணும்னு செய்யலை"
"எம்பக்க நியாயம் கேட்க மாட்டியா"
"கடவுளே.. இப்ப நான் என்னதான் செய்யணும்"
"சரி. நீ பேச மாட்டே.. அவ்வளவுதானே. இன்னிக்கு விதிச்சது இதுதான்னு நினைச்சுக்கிறேன்"
"ஸாரி அங்கிள்.."
"பரவாயில்லம்மா.. நீ வேணும்னு பந்தை எம்மேல போடலியே.. ஹை.. காட்ச் பிடி"
"அங்கிள்.. ஏன் ரெண்டு பேரும் ரொம்ப நேரமா பேசாம ஒக்கார்ந்திருக்கீங்க"
"போச்சுரா. நீ கூட கவனிச்சுட்டியா.. விளையாட்டு ஜோர்லயும்"
"சில சமயம் எங்க அப்பா, அம்மாவும் இப்படித்தான் மூஞ்சியை தூக்கி வச்சுகிட்டு ஒக்காந்திருப்பாங்க"
"அப்புறம் எப்படி சமாதானம் ஆவாங்க.."
"தெரியலியே அங்கிள்.. நாதான் தூங்கிப் போயிடுவேனே."
"அதோ உங்கம்மா உன்னைக் கூப்பிடறாங்க"
"ஸார்.. கடலை வேணுமா"
"ஏற்கெனவே வறுத்து வச்சிருக்கு"
"இது வெவிச்ச கடலை ஸார்"
"அடப் போய்யா"
"ஏதோ சண்டை போல இருக்கு.. நம்ம மேல காட்டறாரு.. கடல.. கடலேய்"
"உனக்கு நிஜம்மா இவ்வளவு அழுத்தம் கூடாது.."
"எத்தனை தடவை ட்ரை பண்ணேன் தெரியுமா.. நெட் வொர்க் பிஸி.."
"மெசேஜ் கொடுத்தேனே.. பார்த்தியா"
"என்னப்பா இது.. பேசவே மாட்டியா"
"ஏய்.. உம்மேல எறும்பு.. சுள்ளெறும்பு.. பொய் சொல்லலே.. நெஜம்"
"அடிப்பாவி.. எப்படி உன்னால இப்படி இருக்க முடியுது"
"ஸார்.. பசிக்குது.. ஏதாச்சும் தர்மம்"
"ப்ச்"
"ஸா..ர்.."
"வேற ஆளைப் பாரு"
"நான் கூட பிச்சைக்காரன் மாதிரி இருக்கேன் இப்ப..காதல் பிச்சை!"
"சிரிக்க மாட்டியா.. "
"உன்னைப் பார்த்தபின்பு என் எல்லாக் கவிதைகளும் பொய்யென்று தெரிந்ததுன்னு அப்ப எழுதினேன்.. உன் கோபம் எதையும் விட உயரம்.. எதையும் விட ஆழம்னு இப்ப எழுதத் தோணுது"
"அங்கிள்.. பை.."
"கிளம்பிட்டியா"
"ம்.. அவங்க பேசிட்டாங்களா"
"எங்கே.. உச்சில இல்ல இருக்கு.."
"ஆல் தி பெஸ்ட் அங்கிள்"
"பாரு.. வருங்காலப் பெண்ணரசி எப்படி வாழ்த்திட்டு போறா.. அட்லீஸ்ட் அவ நிச்சயமா ரூட்ல விடமாட்டா.."
"நான் வந்து ஒரு மணி நேரம் ஆச்சு. நாய் மாதிரி கெஞ்சறேன்.. நீ அலட்டிக்கவே இல்லை"
"ஏய்.. அப்புறம் நேரமாச்சுன்னு கிளம்பிப் போயிருவே.. பிளீஸ்ரா"
"எல்லாம் அவுட்.. என்னவெல்லாம் நினைச்சேன்.. எல்லாம் போச்சு"
"சுண்டல் வேணுமா அண்ணே."
"கூட வேணா வரட்டுமா"
"என்ன சொல்றீங்க"
"உனக்கு உதவியா டப்பாவைத் தூக்கிகிட்டு வரட்டுமா"
"என்ன அண்ணே கிண்டலா"
"இல்லப்பா.. சாமி சத்தியமா.. "
"அடப் போங்கண்ணே.. சும்மா வெளையாடிகிட்டு.. சுண்டல்.. சுண்டல்"
"அட.. இவங்கூட என்னை சேர்த்துக்க மாட்டேங்கிறான்"
"உனக்கு மட்டும்தான் அழுத்தமா.. நான் எழுந்திருச்சு போகவா"
"முடியலைடா.. என்ன யோசிச்சாலும் நிஜம்மா உன்மேல கோபம் வரலே.. ஆனா உன்னை சமாதானம் பண்ண இதுக்கு மேல என்ன செய்யிறதுன்னும் புரியலே.."
"ஓக்கே.. நான் பண்ணது தப்பு.. என்ன தண்டனை வேணா கொடு. ஆனா பேசாம மட்டும் இருக்காதே."
"ஸாரி.. ஸாரி.. "
"ஐ லவ் யூடா"
( இந்தக் கடைசி வரி மட்டும் அவள்! )
16 comments:
//""ஐ லவ் யூடா"( இந்தக் கடைசி வரி மட்டும் அவள்! )//
இங்கனதான் கவுந்து கரைஞ்சி போயிடறாங்க .... ::)) நல்லா இருக்கு... ::))
"ஸாரி.. ஸாரி.. "
"ஐ லவ் யூடா"
( இந்தக் கடைசி வரி மட்டும் அவள்! )
...........இது கல்யாணத்துக்கு முன்.
அப்புறம்: "Saree, saree" இல்லைனா "சரி, சரி"
"I love you da" (அவள்)
புரியுது, தெரியுது........
அருமை ரிஷபன் சார்
ரிஷபன், அருமை. என் மனைவி சில சமயம்
விசேசமாக நான் ஏதேனும் செய்தால்,
உங்க கையை எனக்கு குடுங்க என்று கேட்பார்கள்.
அதுப்போல் எனக்கு
உங்க கையை கொஞ்ச நாள் இரவலாக கொடுங்களேன்.
வாங்கி கொள்கிறேன். கதைகள் எழுத!!!!!!!!!!!!!
வெரைட்டியா இருக்கு ரிசபன் தொடர்ந்து சிறப்பா எழுதுங்க...!
என்ன தண்டனை வேணா கொடு. "ஐ லவ் யூடா"
so the punishment is their love???????????
நல்லா இருக்கு ரிஷபன்
"ஐ லவ் யு டா"
கண்கள் கிறங்கி
ஒரு விதமாய்
ஆச்சுதே..
இந்த வார்த்தையைப்
பார்த்தவுடன்.....
அன்புடன் ஆர்.ஆர்
வித்யாசமான முயற்சி சார். நல்லா இருக்கு. வாழ்த்துக்கள்.
BEAUTIFUL!!
SO CUTE
காதலுக்கே உரித்தான ஊடலை அழகா சொல்லியிருக்கீங்க.ரசித்தேன் !!!
அப்படியே அள்ளி கொண்டீங்களே சார் கடைசி வரியிலே?
அவுங்கத i love u சொல்லிட்டாங்கள்ள அப்புற ஏ இது ஒரு வழிப்பாதை.
கதால் ஒரு கண்ணா மூச்சி விளையாட்டு.
சுவரசியமான பதிவு.
காதல் கொஞ்சுது ரிஷபன்.
நிஜமான உண்மை ;-) சிறப்பாக எழுதி உள்ளீர்கள் :-)
Post a Comment