December 15, 2009

புறநகர் கடவுளர்கள்


ஆயிரம் வருடப் பழமையில் ஊர்க் கோவில்
வவ்வால் நாற்றம்
புறாக்களின் 'க்கும்'
புஷ்கரணியில் பொரி விழும் நேரம்
துள்ளும் மீன்கள்
பாசி வழுக்கும் எச்சரிக்கையில்
மனிதர் புழங்காக் குளம்
ரேஷன் அரிசியில் பிரசாதம்
முகஞ் சுளித்த பக்தர்
நிராகரித்து வைத்ததை
கோவில் பூனை கூட
முகர்ந்து முகம் சுளிக்கும்.
எத்தனை மனிதர்களின்
குணம் பார்த்த கடவுள்..
இன்று சீந்துவாரற்று.
புறநகர்ப் பகுதியில் புதிதாய்
முளைத்த கோவிலில்

கொட்டும் மின்சாரமுரசு..
வாசலில் கரும்பலகையில்
இந்த மாதம் முழுக்க உபயதாரர்கள்.
நிரம்பும் உண்டியல்..
'டூ வீலர்' அர்ச்சகர் கையில் செல்பேசி..
வெள்ளிக் கவசம் அலுத்து
தங்கக் கவசம் வருகைக்கு காத்திருக்கும்
புறநகர்க் கடவுள் அறிவாரா ..
மனிதன் தேவதைகளிடமும் பேதம் பார்ப்பவனென்று!

13 comments:

Chitra said...

வாசலில் கரும்பலகையில்
இந்த மாதம் முழுக்கஉபயதாரர்கள்..........லைட் கோவிலுக்கு வெளிச்சத்தை தருவதை விட உபயம் செய்தவர்களின் விளம்பர குணத்தை நன்கு வெளிச்சத்தில் காட்டும். கவிதை ரொம்ப நல்லா இருக்குங்க.

ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி said...

நம்ம ஊரில் இல்லையா
ஏழைப் பிள்ளையார் கோவில்!!

vasanthamullai said...

நம் THIRUCHI IL இந்த மாதிரி கோயில்கள் உண்டு . உதாரணம் சத்திரம் பஸ் ஸ்டாண்ட் காமாட்சி அம்மன் கோயில் முதலில் APPADITHAN IRUNTHATHU .

பிரியமுடன்...வசந்த் said...

கோபம் சுட்டுத்தெறிக்குது கவிதையில் நல்லா சொல்லியிருக்கீங்க...!

கிருபாநந்தினி said...

ரிஷபன்! இதே மாதிரி கொஞ்ச வருஷத்துக்கு முன்னே திருவண்ணாமலையில் ஒதுக்குப்புறமா ஒரு இடிஞ்ச கோயில் பார்த்தேன். அதுல மூளியாகிப்போன சாமி சிலைங்க மேலெல்லாம் மனிதக் கழிவுகள் காய்ந்து கிடந்ததைப் பார்த்து ரொம்பச் சங்கடப்பட்டேன். உங்க கவிதை ரொம்ப உண்மையாயிருந்துச்சு!

என் நடை பாதையில்(ராம்) said...

காதல், நட்பு என்றில்லாமல் அனைத்து கோணத்திலும் கவிதை எழுதுகிறீர்கள். சபாஷ்....

ரிஷபன் said...

//கோவிலுக்கு வெளிச்சத்தை தருவதை விட உபயம் செய்தவர்களின் விளம்பர குணத்தை நன்கு வெளிச்சத்தில் காட்டும்//
ரொம்ப சரி.. சித்ரா.

//நம்ம ஊரில் இல்லையா
ஏழைப் பிள்ளையார் கோவில்!!//
உச்சிப் பிள்ளையாரும் இருக்காரே!

//உதாரணம் சத்திரம் பஸ் ஸ்டாண்ட் காமாட்சி அம்மன் கோயில் முதலில் APPADITHAN IRUNTHATHU .//
இப்ப நல்லா கவனிக்கிறாங்களா வசந்தமுல்லை..

//கோபம் சுட்டுத்தெறிக்குது கவிதையில் நல்லா சொல்லியிருக்கீங்க...!//
இது பிரியமுடன் கோவம்.. வசந்த்!

//உங்க கவிதை ரொம்ப உண்மையாயிருந்துச்சு!//
கவிதைக்கு உண்மை அழகு கிருபா நந்தினி

//காதல், நட்பு என்றில்லாமல் அனைத்து கோணத்திலும் கவிதை எழுதுகிறீர்கள். சபாஷ்....//
அனைத்து கோணத்திலும் உங்க பின்னூட்டமும் ராம்.

உங்கள் வருகை.. கருத்து.. மிக்க நன்றி.

வி. நா. வெங்கடராமன். said...

ரிஷபன் சார், நீங்கள் உங்கள் கவிதையில் கூறிய உண்மை புதுசு புதுசா கோவில் கட்ட துடிக்கும் மனிதர்களை மாற்றும் என நம்புவோம். எத்தனை பழைய கோவில்கள் இடிபாடுகளுடன் இருக்கும்போது புதிதாக ஒன்று தேவை இல்லை என உணர்த்தும் அருமையான கவிதை.

வெங்கட் நாகராஜ்
புது தில்லி

பூங்குன்றன்.வே said...

//புறநகர்க் கடவுள் அறிவாரா ..
மனிதன் தேவதைகளிடமும் பேதம் பார்ப்பவனென்று!//

சரியான கேள்விதான்..கடவுள் இருப்பின் நம்மை பேதம் பார்த்திருக்கமாட்டார்.ஆனால் நம் மக்கள் தான் பல வகைகளில் பிரித்துவிட்டார்கள் நண்பா.

K.B.JANARTHANAN said...

கடவுளை வேண்டி கவிதை பாடுவர். கடவுளுக்காக வேண்டி இந்தக் கவிதை...
நன்றாகவே சொல்லியிருக்கிறீர்கள் நம் தவறை. சில அரும் பெரும் கோவில்களுக்கு செல்கையில் சரியாகப் பராமரிக்கப்படாத அவற்றின் நிலை கண்டு மனம் வருந்துவதுண்டு. அதை தங்கள் கவிதையுடன் பகிர்ந்து கொள்ள முடிந்தது.

எம்.ரிஷான் ஷெரீப் said...

நல்ல கவிதை.

கவிதை(கள்) said...

யதார்த்தத்தை வலியுடன் வெளிப்படுத்தும் வார்த்தை பிரயோகங்கள் அழகு

நம்ம ஊரா நீங்கள்

வாழ்த்துக்கள்

விஜய்

ஹேமா said...

நிச்சயமாய் கடவுளிடமும் பேதமுண்டு.உங்களின் கோபம் என் மனதிலும் இருக்கிறது ரிஷபன்.