March 06, 2011

கணினி மொழி

எனக்கான வார்த்தைகளை
தேடித் தேடி
புதுப் புது அனுபவங்களில்
எலியும் பூனையுமாய்
என் கணினியும் நானும்..
திருத்த முடியாத
தருணங்களில்
விட்டு விடுகிற
வார்த்தைகள்
நான் சொல்லாத அர்த்தம் காட்டி
பாராட்டும், விமர்சனமும்
வாங்கி தருகின்றன..
என்றைக்கேனும் ஒரு நாள்
என் மனசும்
எழுதுகிற கவிதையும்
ஒரே அலை வரிசையில்
வரக்கூடும்..
அன்று தான்
கவிதை குறித்த திருப்தி
எனக்குள்
கொடியேற்றி நிற்கும்.
அதுவரை
தேடலும் தவிப்புமாய்
என் கவிதைப் பயணம்..

20 comments:

கே. பி. ஜனா... said...

ஆனால் நல்ல கவிதை படித்த திருப்தி எனக்குள் கொடியேற்றி நிற்கிறது!

middleclassmadhavi said...

மவுஸ் இருப்பதால் கணிணி எலியா? அதைப் பிடிக்கும் நீங்கள் பூனையா?

கவிதை நல்லாயிருக்கு!

எல் கே said...

ஏற்கனவே கணிணி மொழி கற்று தேர்ந்தாகிவிட்டது போல் இருக்கே

வை.கோபாலகிருஷ்ணன் said...

உங்கள் மனசும் எழுதுகிற கவிதையும்
ஒரே அலை வரிசையில் தான் இப்போதும் என்று நினைக்கிறது என்
மனசு.

நல்லதொரு கவிதை தந்தமைக்கு நன்றி.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

இந்த கவிதைக்கு ஒரு மெளஸ் இருக்கிறது!

வெங்கட் நாகராஜ் said...

கணினி மூலம் நல்ல கவிதை!

Anonymous said...

தேடல்தானே கவிதையின் ஆரம்பம்! :)

Matangi Mawley said...

ha ha! nalla imagination, sir! azhakaana kavithai...

Anonymous said...

நன்றாக கவிதை எழுதினாலும், தன்னையே தேடலுக்கு உட்படுத்தல் என்பது மட்டுமே நம்மை மேலும் மேலும் உயர்த்தும் வழி! தொடரட்டும் தேடல்கள்.

RVS said...

கருத்தைக் கவரும் கணினி மொழி! ;-)

மோகன்ஜி said...

அற்புதம் ரிஷபன்... அழகான கவிதை

/அதுவரை
தேடலும் தவிப்புமாய்
என் கவிதைப் பயணம்../
அழகு...
தேடலும் தவிப்பும் தானே கவிதை?

ஹேமா said...

இவ்ளொ பதிவுகள் எழுதின அப்புறமும் இன்னும் திருப்தியான பதி்வு எழுதலியா ரிஷபன் !

பத்மா said...

சரி தான் ரிஷபன் இந்த தேடலும் தவிப்பும் அனைவருக்குள்ளும் இருக்க வேண்டிய ஒன்று ...

ஹுஸைனம்மா said...

ம்.. நாம ஒண்ணு நினைச்சு எழுத, அதப் படிக்கிறவங்க வாசிச்சு வேற எதையோ புரிஞ்சுக்க... யாராவது ஒருத்தர் நாம நினைச்சதையே கரெக்டா நினைச்சுட்டா, அப்ப வர்ற சந்தோஷம்..

தக்குடு said...

good one sir!!..:)

@ ஹுஸைனம்மா - i am fully agree with you....:)

ADHI VENKAT said...

கணினியை வைத்து ஒரு கவிதை. அருமை சார்.

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

கோபு சார் ப்ளாக்கில் ’எலி’ஸபத் டவர்ஸ் மூட்ல இங்க வந்தா இது வேற ஒரு எலி.

ஆனாலும் துரத்தினாலும் போகாது வ(லை)ளைக்குள் நம்மைத் தினமும் அழைத்துப் போகும் அதிசய எலி.

எலி படுத்திய பாட்டில் எழுதியது போதுமென ஏதோ எழுதினதாய் நினைத்து எழுந்தாலும் எழுதாத எண்ணங்களுக்குப் புதிதாய்ச் சொக்கய் மாட்டி அழகு சேர்க்கும் எலி.

அற்புதம் ரிஷபன்.

அன்புடன் நான் said...

கவிதை நல்லாயிருக்குங்க.... பாராட்டுக்கள்.

ஹ ர ணி said...

கவிதையும் எழுதுகிற மனசும் ஒத்துபபோனால்தான் ஒரு கவிதை உருவாக்கம் நிகழும் ரிஷபன். நீங்கள் அறியாததா? கவிதையின் நுட்பமாய் ஒரு கவிதை அருமை.

Pranavam Ravikumar said...

கவிதை அருமை. வாழ்த்துக்கள்!