பொதுவாய் எரிந்து விழுகிற நடத்துனர்களைத் தான் பார்த்திருக்கிறேன். அவர்கள் வேலை அப்படி.. நாள் முழுவதும் அதுவும் எரிச்சலூட்டுகிற உடை.. வெய்யில்.. யாருக்குமே பொறுமை பறிபோகும்.
இன்று மாலை வீடு திரும்பும்போது பஸ்ஸில் கிழிந்த ஐந்து ரூபாய் நோட்டை கொடுத்த டீன் ஏஜ் பையனிடம் திருப்பிக் கொடுத்து விட்டு 'வேற கொடு' என்றார்.
அவனிடம் வேறு சில்லறை இல்லை. டிக்கட்டும் தந்தாகிவிட்டது.
அவன் டிக்கட்டை திருப்பிக் கொடுக்க பார்த்தான்.
'வச்சுக்க'
அவ்வளவுதான். எதுவுமே நடக்காதது மாதிரி போய் விட்டார். செக்கரிடம் அவன் மாட்டக் கூடாது என்பதற்காக டிக்கட் !
நிலைமையை மிக அழகாய் அவர் கையாண்ட விதம் எனக்கு பிடித்துப் போனது.
இரைச்சலே நமது தேசிய கீதமாய் மாறிப் போன சூழலில் சிரிப்பும் நிதானமும் எவர் வசம் உள்ளதோ அங்கு இயல்பாய் மனம் லயித்துப் போகிறது.
தினசரி யாராவது ஏதாவது ஒன்றை கற்று கொடுத்து விடுகிறார்கள். அல்லது நினைவு படுத்துகிறார்கள்.
உதிர்ந்த மலர்கள்
இருந்த இடமாய்
அந்த பூச்செடி!
காற்றில் மிதக்கும் வாசம்..
மறுபடி பூக்கும் என
மனசுள் நம்பிக்கை பூக்கும்..
எதுவும் வீணாவதில்லை..
பூவும்
நம்பிக்கையும்..
22 comments:
சார், இது மிகவும் அருமை, புதுமை.
முள்ளும் மலரும் என்பார்களே அது போல. தாங்கள் கை பட்டால் எல்லாமே “பூக்கும்” தான். பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
//இரைச்சலே நமது தேசிய கீதமாய் மாறிப் போன சூழலில் சிரிப்பும் நிதானமும் எவர் வசம் உள்ளதோ அங்கு இயல்பாய் மனம் லயித்துப் போகிறது. தினசரி யாராவது ஏதாவது ஒன்றை கற்று கொடுத்து விடுகிறார்கள். அல்லது நினைவு படுத்துகிறார்கள்.//
ஜொலிக்கும் வரிகள்.என்னை என்னவோ செய்கிறது. ஆங்காங்கே இப்படியும் ஒருசிலர் இருக்கிறார்கள் தான், மனிதநேயத்திற்கு அடையாளமாக. பாராட்டுக்கள்.
//உதிர்ந்த மலர்கள் இருந்த இடமாய் அந்த பூச்செடி!காற்றில் மிதக்கும் வாசம்..மறுபடி பூக்கும் எனமனசுள் நம்பிக்கை பூக்கும்..எதுவும் வீணாவதில்லை..பூவும் நம்பிக்கையும்..//
நம்பினார் கெடுவதில்லை.
உங்கள் நம்பிக்கையே யானை பலத்திற்கான தும்பிக்கை.
சொல்லிப்போனது ஒருவரிக்கதை.
அதில் புதைந்துள்ளதோ ஆயிரம் நல்லெண்ணங்கள். வாழ்த்துகள்!
எண்ணம் பாராட்டும் வண்ணம் உள்ளது.
வித்தியாசமான நடத்துனர்! அதுவும் சென்னை பேருந்தில் உள்ள நடத்துனர்கள் ஆரம்பிப்பதே “சாவுகிராக்கி!” என்று தான் என்பது பல நாட்களில் மனதை வருத்திய விஷயம்… நல்ல பகிர்வுக்கு மிக்க நன்றி சார்.
//தினசரி யாராவது ஏதாவது ஒன்றை கற்று கொடுத்து விடுகிறார்கள். அல்லது நினைவு படுத்துகிறார்கள். உதிர்ந்த மலர்கள் இருந்த இடமாய் அந்த பூச்செடி!காற்றில் மிதக்கும் வாசம்..மறுபடி பூக்கும் எனமனசுள் நம்பிக்கை பூக்கும்..எதுவும் வீணாவதில்லை..பூவும் நம்பிக்கையும்..//
இந்த பதிவிலிருந்தும் நான் கற்றுக் கொள்கிறேன்.
பதிவில் பூக்கும் வாசனை மலர்களிலிருந்து
எனக்கும் நம்பிக்கை பூக்கிறது
எல்லோரிடமும் கற்றுக் கொள்ள சின்ன சின்ன விஷயங்கள் இருக்கின்றன
:-))
class.
நல்ல மனிதர்கள் இன்னும் எங்கோ ஒவ்வொருத்தர் இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள் !
இரைச்சலே நமது தேசிய கீதமாய் மாறிப் போன சூழலில் சிரிப்பும் நிதானமும் எவர் வசம் உள்ளதோ அங்கு இயல்பாய் மனம் லயித்துப் போகிறது.
...rightly said. I agree with you. :-)
அருமை..வாழ்த்துகள்!
சிரிப்பும் நிதானமும் எவர் வசம் உள்ளதோ அங்கு இயல்பாய் மனம் லயித்துப் போகிறது. //
நிச்சயமா..
பாராட்டப்படவேண்டிய அருமையான மனிதர்!!
இப்படியும் ஒரு நடத்துனரா! இந்த நிகழ்வை பகிர்ந்த உங்களுக்கு நல்ல மனது சார்.
//இயல்பாய் மனம் லயித்துப் போகிறது. //
நாளைய மலருக்கு உரமாய் மாறும் உதிர்ந்த மலர்கள்!
விருட்சமாய் மாறும் நம்பிக்கை விதைகள்!
பூத்தது.
நடத்துனருக்கு மிக பெரிய நன்றிகளை கூற தோன்றுகிறது ,...
நல்ல பகிர்வு ....
மிக நன்றிங்க
இப்படிப் பட்ட நல்ல மனிதர்களைப் பார்க்கும் போது வாழ்வின் மீது நமக்கும் நம்பிக்கை வருகிறது... நல்லதை உடனுக்குடன் பாராட்டும் உங்களைப் போன்றவர்கள் நிறைய வேண்டும் இந்த உலகிற்கு....
//தினசரி யாராவது ஏதாவது ஒன்றை கற்று கொடுத்து விடுகிறார்கள். அல்லது நினைவு படுத்துகிறார்கள்//.
உங்களின் பதிவு
இந்த அதிகாலையை
மேலும் இளக்கி கொடுக்கிறது ரிசபன்.
நல்ல பகிர்வு.
பாருங்க, இதப் பதிவாப் போடுற அளவு அரிதான விஷயமாகிவிட்டது!! :-))))
Post a Comment