December 05, 2009

வாழ்வின் அர்த்தங்கள்

சந்திப்புகளைத் தவிர்க்காதீர்கள்.

பிறிதொரு நாள் பார்த்துக் கொள்ளலாம் என்று.

செடியில் பூத்த மலர்மறு நாளே வீழ்கிறது..

கரைக்கு வந்த அலை அடுத்த நிமிடம் இல்லை..

மேலே உங்களைக் கடந்து போன மேகம் கூட

மறுபடி வரப் போவதில்லை..

'ஹாய்' சொன்ன எதிர் வீட்டு

குழந்தைஇன்றும் உங்கள்

புன்னகையைவரவேற்கிறது ஆர்வமாய்..

முகந்திருப்பிப் போய்விட்டால்

அதன் முகம் வாடிப் போகும்..

பசித்த முகம் எதிர்ப்பட்டால்

உணவுப் பொட்டலம் தந்து

கண்ணின் ஒளியைப் பாருங்கள்..

நாட்காட்டியைநன்றாகப் பார்த்திருக்கிறீர்களா..

நமக்காகவே வருட முழுவதும்

காற்றில் ஆடிக் கொண்டிருக்கிறது..

எத்தனை விவரங்கள் அதன் மேல்..

எல்லாவற்றையும் நாம் கவனிப்பதில்லை என்றாலும்.

'விருட்டென்று' தேதி கிழித்துநகராதீர்கள்..

ஒரு கையால் நாட்காட்டி அட்டையைப் பற்றி

வாத்சல்யமாய் பிரியுங்கள்..

கசக்காமல் போடுங்கள்..

இவ்வளவும்,

இதற்கு மேலும் செய்தபின்

மனசார சொல்லுங்கள்..

'என்ன அழகான வாழ்க்கை' என்று..

ஏனென்றால் பிறந்ததுபுலம்பலுக்காக அல்ல !

7 comments:

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

அட என்ன ஒரு அருமையான கவிதை..
படம் அதற்கு மேல்!

CS. Mohan Kumar said...

அருமை!!!

Chitra said...

"ஏனென்றால் பிறந்தது புலம்பலுக்காக அல்ல !" ------- வாழ்க்கையின் உன்னத அர்த்தத்தை தெளிவாக சொல்லுகிறது, உங்கள் கவிதை.

கமலேஷ் said...

'விருட்டென்று' தேதி கிழித்துநகராதீர்கள்..

ஒரு கையால் நாட்காட்டி அட்டையைப் பற்றி

வாத்சல்யமாய் பிரியுங்கள்..

அழகு..

வெங்கட் நாகராஜ் said...

Excellent!

Venkat Nagaraj
New Delhi

கே. பி. ஜனா... said...

'விருட்டென்று' தேதி கிழித்துநகராதீர்கள்..

ஒரு கையால் நாட்காட்டி அட்டையைப் பற்றி

வாத்சல்யமாய் பிரியுங்கள்..

கசக்காமல் போடுங்கள்..
superb!

kavya said...

வாழ்கையை ரசித்து வாழ்பவர்களுக்கே இப்படிப்பட்ட கவிதைகள் சாத்தியம் .நல்ல ரசனை.