December 16, 2009

தெருவுக்கு வாங்க

என் மீது எந்தத் தவறும் இல்லை..
ஜனித்தபோது..
'அம்மா' என்கிற உறவை மட்டுமே உணர்ந்து
உலகை எட்டிப் பார்த்தேன்..
நான் எப்படி எல்லாம் இருக்க வேண்டுமென்று ..
சொல்லித் தரப்பட்டதை விட
எப்படி எல்லாம் இருந்து விடக் கூடாது என்று
இடை விடாமல் என் காதுகளுக்குள் கத்தினார்கள்..
பெற்றோர்.. உறவு.. மதம்..அரசியல்வாதிகள்..
எவரும் விடவில்லை என்னை..
தப்பித்துப் போக நூல்களைப் ப(பி)டித்தேன்..
கிடைத்த எழுத்துக்களை எல்லாம்
ஆர்வமாய் உள்வாங்க முயன்றேன்..
எத்தனை முரண்கள்..
அங்கும் திணித்தல்கள்..
எல்லாவற்றையும் தூக்கிப் போட்டு
தெருவுக்கு வந்தேன்..
என்னைப் போலவே சங்கடப்படும் வேறு சிலரும்..
நாங்கள் இப்போது அடையாளமற்றவர்கள்..
உலகின் பார்வையில்..
எங்களுக்கான அன்பின் பார்வையில்
ஒரே இனம் மனிதனாய்..
இப்போதுதான் நன்றாகச் சிரிக்கிறோம் வாய் விட்டு ..
ரசனையாய்.. தெளிவாய்..
விரல்களை நீட்டுங்கள்
சுட்டுவதற்கு அல்ல..
அன்பால் கட்டுவதற்கு..
போன தலைமுறையை..
நேற்றைய மனிதர்களை
நையாண்டி செய்வதில்
நேரம் கழித்து விட்டு
நேசம் தொலைத்து விட்டு
நாளைய மனிதர்களுக்கு 'அவலாகி' விடாதீர்கள்..
தெரு இன்னும் காத்திருக்கிறது..
அன்பின் வருகைக்காக.

9 comments:

என் நடை பாதையில்(ராம்) said...

பிரமாதம்... "உங்களைப்பற்றி" இன்னும் கொஞ்சம் எழுதுங்கள்.

வசந்தமுல்லை said...

நாங்கள் இப்போது அடையாளமற்றவர்கள்..
உலகின் பார்வையில்..
எங்களுக்கான அன்பின் பார்வையில்
ஒரே இனம் மனிதனாய்..
இப்போதுதான் நன்றாகச் சிரிக்கிறோம் வாய் விட்டு ..
ரசனையாய்.. தெளிவாய்..

இந்த வரிகள் என் மனதை வருடியது!!!! பிரமாதம்.!!!!!!

Chitra said...

நான் எப்படி எல்லாம் இருக்க வேண்டுமென்று ..
சொல்லித் தரப்பட்டதை விட
எப்படி எல்லாம் இருந்து விடக் கூடாது என்று
இடை விடாமல் என் காதுகளுக்குள் கத்தினார்கள்............ஒவ்வொரு கவிதையிலும் உங்கள் உள் மனதில் உள்ள குழந்தைகளை பற்றிய கரிசனையும் ஆதங்கமும் பாசமும் நன்கு வெளிப்படுகின்றன. . அருமை.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

காத்திருத்தல் ஒரு சுகமான அனுபவம்!

கே. பி. ஜனா... said...

// இன்னும் காத்திருக்கிறது..
அன்பின் வருகைக்காக. //
நாங்களும் காத்திருக்கிறோம்
இது போன்ற சிறந்த கவிதைகளின் வருகைக்காக.

ப்ரியமுடன் வசந்த் said...

//நேரம் கழித்து விட்டு
நேசம் தொலைத்து விட்டு
//

கவிதை முழுதும் ஆதங்கம் தெறிக்கிறது

நல்லா சொல்லியிருக்கீங்க பாஸ்..!

கமலேஷ் said...

கவிதை மிகவும் நன்றாக இருக்கிறது...
வாழ்த்துக்கள்..

ஹேமா said...

ஆதங்கம்.முன்னோர்கள் கட்டிய நூலில் அல்லவா நாம் இன்னும் கட்டுப்பட்டுக் கிடக்கிறோம்.

Thenammai Lakshmanan said...

எங்களுக்கான அன்பின் பார்வையில்
ஒரே இனம் மனிதனாய்..

அருமை ரிஷபன்