எனக்கு வந்த சில குறுஞ்செய்திகள் : -
யாராலும் விலைக்கு வாங்க முடியாத படி!
உன் மகிழ்ச்சியை எளிய விலையில் வை..
எல்லோரும் உன்னிடம் இலவசமாகப் பெறும் அளவுக்கு.
உங்கள் துக்கங்களுக்கு சந்தையில் இடம் இல்லை..
அதனால் சோகங்களை எப்போதும் விளம்பரம் செய்யாதீர்கள்!
- சார்லி சாப்ளின்
பேசுவதை விட குறுஞ்செய்தி மேலானது.
ஏனென்றால் பேச்சு உதட்டிலிருந்து..
செய்தியோ இதயத்திலிருந்து!
நீ அழுவதைப் பார்த்து
உன் அம்மா சிரித்த ஒரே நாள்
உன் பிறந்த நாள்!
வயதானதால் தான் எல்லோரும் சிரிப்பதில்லை என்று அர்த்தமில்லை..
உண்மை என்னவென்றால் சிரிப்பை மறந்ததால் தான் வயதான தோற்றமே!
நண்பன் அவசியமா..
நட்பு இல்லாத வாழ்வை நினைத்துப் பாருங்கள்.
ப்ள்ளியில்..
வைபவங்களில்..
பிறந்த நாள் அன்று..
வருத்தம் வரும் போது..
சிரிப்பைப் பகிர..
சீண்ட..
பிரிந்தால் கலங்க..
சேர்ந்தால் கவனிக்க..
இதை உங்கள் முட்டாள் நண்பர்களுக்கு அனுப்புங்கள்..
அவர்கள் இல்லாத வாழ்க்கை அர்த்தமற்றுப் போகிறது என்பதைச் சொல்ல..
இதோ நான் உனக்கு அனுப்பியதைப் போல!
14 comments:
//உன் கோபத்தை விலை உயர்ந்ததாக ஆக்கு.. யாராலும் விலைக்கு வாங்க முடியாத படி!உன் மகிழ்ச்சியை எளிய விலையில் வை.. எல்லோரும் உன்னிடம் இலவசமாகப் பெறும் அளவுக்கு.
////
இது ரொம்ப பிடிச்சது...நன்றாக இருக்கிறது ரிஷபன்
குறுஞ்செய்திகளில் தான் எத்தனை படாபடா விஷயங்கள் பகிரப்படுகின்றன!
குறுஞ்செய்திகள் ஒரேயடியாகக் குவிந்து போகும்போது, பார்க்கவும், படிக்கவும், பொறுமையின்றி, நேரம் இன்றி, அலட்சியமாக அவற்றை நீக்குவோரும் அதிகமாகி விட்டனர்.
ஒருவரை நீண்ட நேரமாகத் தொடர்பு கொண்டு பேச முடியாமல், அவசரமாக ஓர் செய்தி அனுப்பினேன்.
பிறகு அவரை சந்தித்து நான் கேட்டபோது, குறுஞ்செய்திகளையெல்லாம் நான் எப்போதுமே படிப்பதே கிடையாது என்று மிகச் சாதாரணமாகச் சொல்லிவிட்டார். இப்படியும் சிலர் இருக்கத்தான் இருக்கிறார்கள்.
நல்ல பதிவுக்குப் பாராட்டுக்கள். நன்றிகள்.
[தமிழ்மணம் 0 to 1 & INDLI 2 to 3]
vgk
அருமையான குறுஞ்செய்திகள்
பதிவாக்கித் தந்தமைக்கு நன்றி
நல்ல குறுஞ்செய்திகள்.. பகிர்ந்ததற்கு நன்றி....
நல்ல பகிர்வு.
//நீ அழுவதைப் பார்த்து
உன் அம்மா சிரித்த ஒரே நாள்
உன் பிறந்த நாள்!//
அருமை.
குட்டுவது போல் இருக்கிறது குறுஞ்செய்திகள்..பலே!
செய்திகள் ஒவ்வொன்றும் புத்துணர்வு ஊட்டுவதாக உள்ளன. அதிலும் சோகத்தை விளம்பரப்படுத்துவதால் பயனில்லை என்னும் செய்தியில் பொதிந்திருக்கும் கருத்து எத்தனை ஆழமானது. கோபத்துக்கும் மகிழ்ச்சிக்கும் விலை நிர்ணயம் செய்வதும் வித்தியாசமாக உள்ளது. தாயின் மனம், நட்பின் மகத்துவம் என்று மொத்தத்தில் அத்தனையும் அற்புதம். பகிர்வுக்கு நன்றி ரிஷபன் சார்.
//நீ அழுவதைப் பார்த்து
உன் அம்மா சிரித்த ஒரே நாள்
உன் பிறந்த நாள்!//
ரொம்ப நல்லாருக்கு..
பாடம் சொன்ன வாமனர்கள்.உருவாக்கியவர்கள் நிச்சயம் பெரிய கோபுரங்கள்தான்.பகிர்வுக்கு நன்றி ரிஷபன்.
நன்று நண்பரே ...
//நீ அழுவதைப் பார்த்து
உன் அம்மா சிரித்த ஒரே நாள்
உன் பிறந்த நாள்!//
உண்மையான தாயன்பை உணர்த்துகிறது...
நன்றி ரிஷபன்!
விக்கிபீடியாவில் தகவல்:
சாப்ளினின் புகழினால் சாப்ளினைப் போல் தோற்றம் அளிப்போருக்கான போட்டிகள் பல நடத்தப் பட்டு வந்தன. சாப்ளின் ஒரு முறை அப்போட்டி ஒன்றில் ரகசியமாகப் பங்கு பெற்றார். இதில் இவரால் மூன்றாம் பரிசையே வெல்ல முடிந்தது!
இதிலும் இழையோடும் நகைச்சுவையை பார்க்கிறேன்.
ஹா.. என்ன ஒரு வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார் அவர்.
அவரின் வார்த்தையையும் பாருங்களேன்:
உங்கள் துக்கங்களுக்கு சந்தையில் இடம் இல்லை..
அதனால் சோகங்களை எப்போதும் விளம்பரம் செய்யாதீர்கள்!
அவர் பற்றிய நினைவை கிளர்த்தும் இடுகையை தந்தமைக்கு நன்றி ரிஷபன் ஜி!
குறுகிய வாழ்வை அர்த்தமுடன் வாழ்வதற்குரிய பலவற்றுள் குறுஞசெய்திகளும் இட்த்தைப் பிடித்துக்கொள்கின்றன. நல்லாயிருக்கு ரிஷபன்.
\\நீ அழுவதைப் பார்த்து
உன் அம்மா சிரித்த ஒரே நாள்
உன் பிறந்த நாள்!///
மிகச் சிறந்த ஹைக்கூ கவிதையாய்...
இந்த வரிகள். அருமை ரிஷபன் சார்.
Post a Comment