குழந்தைப் பருவம்
இன்னமும் மனசில்
தவழ்ந்து கொண்டுதானிருக்கிறது
எல்லோருள்ளும்..
கை நீட்டி தொட்டுப் போகும்
குழந்தை
சட்டென்று
எழுப்பி விட்டுப் போகிறது
உள்ளே ஒளிந்திருந்த
மனக் குழந்தையை..
ஆண் பெண் பேதமற்று
பாச விரல்களை நீட்டி
‘வாழ்த்து’ சொல்லும்
ஒவ்வொரு முறையும்
தேவன் வருகிறார்
எனக்குள்ளும்
உனக்குள்ளும்
எல்லோருக்குள்ளும்..
அவ்வப்போது
தலை நீட்டும்
குழந்தையை
எப்போதும்
தொலைய விடாமல்
காப்பாற்றிக் கொள்வோம்..
இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்!
25 comments:
//அவ்வப்போது
தலை நீட்டும்
குழந்தையை
எப்போதும்
தொலைய விடாமல்
காப்பாற்றிக் கொள்வோம்..//
அருமையான வரிகள்!!!
மனிதர்கள் தங்கள் மனிதத்தை இழந்து விடாமல் இருக்க இந்த உணர்வும் ரசிப்பும் எப்போதுமே அவசியமாகிறது....
//கை நீட்டி தொட்டுப் போகும்
குழந்தை
சட்டென்று
எழுப்பி விட்டுப் போகிறது
உள்ளே ஒளிந்திருந்த
மனக் குழந்தையை..//
வரிகள் அழகு..
குழந்தைகள் தின வாழ்த்துக்கள்..
குழந்தைகள் போன்றே அருமையான கவிதை.பகிர்விற்கு நன்றி
கவிதை அருமை...குழந்தைகள் தின வாழ்த்துக்கள் ...
குழந்தைகளைப் பார்த்தாலே ஒரே குதூகலம் தான். நாமும் ஒரு குழைந்தையாகிவிடுவதும் உண்மை தான். நல்ல அழகிய பதிவு அந்த படத்தில் காட்டியுள்ள கஷ்குமுஷ்கு குழந்தை போலவே.
த.ம : 2.
vgk
குழந்தையும் தெய்வமும் கொண்டாடுமிடத்து என்பார்கள். நம்முள் இருக்கும் குழந்தையை அறிய முற்பட்டால் ஒரு வேளை THE KINGDOM OF HEAVEN IS WITHIN YOU என்பது உணரப்படலாம். வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள் உங்களுக்கும்!
//சட்டென்று
எழுப்பி விட்டுப் போகிறது
உள்ளே ஒளிந்திருந்த
மனக் குழந்தையை..//
உங்கள் கவிதையும்!
//அவ்வப்போது
தலை நீட்டும்
குழந்தையை
எப்போதும்
தொலைய விடாமல்
காப்பாற்றிக் கொள்வோம்..//
நல்ல கவிதை... நம்முள் மீதமிருக்கும் குழந்தைக்கு வாழ்த்துகள்... :)
அருமை அருமை
அந்தக் குழந்தைத்தனத்தைக் காத்தால் போதும்
பாதி நோயும் பாதி துயரும் நிச்சயம் குறையும்
த.ம 5
அழகான குழந்தைக் கவிதை !
கையால் தொடும் குழந்தை நம் மனதில் இருக்கும் மழலையை தட்டி எழுப்பும்.. ஆஹா.. அற்புதம் சார். :-)))
// கை நீட்டி தொட்டுப் போகும்
குழந்தை
சட்டென்று
எழுப்பி விட்டுப் போகிறது
உள்ளே ஒளிந்திருந்த
மனக் குழந்தையை..
//
ஆம்! ஐயா!!
இவ் வரிகள் என் மனக் குழந்தையை எழுப்பிவிட்டுப் போகிறது
அருமை!
த ம ஓ 6
புலவர் சா இராமாநுசம்
-ஆம். அவ்வப்போது தலைகாட்டும் குழந்தையை நாம் காப்பாற்றிக் கொள்ளத்தான் வேண்டும். அழகான வரிகளில் அருமையாகச் சொல்லியுள்ளீர்கள் ரிஷபன் சார்... உங்களுக்கு என் குழந்தைகள் தின வாழ்த்துக்களும், அருமையான கவிதைக்கு நன்றிகளும்...
ஒரு குழந்தையின் ஸ்பரிசத்தை உணர்ந்தாற் போல் இருந்தது.
அருமையான வரிகள் சார்.
வழமை போல் அருமையான கவிதை ரிஷபன்.
உங்களுக்கும் வாழ்த்துக்கள்.
அட..குழந்தைகள் தினமன்று குதூகலமாய் ரிஷபனின் கவிதை!
சூப்பர்!!
//கை நீட்டி தொட்டுப் போகும்
குழந்தை
சட்டென்று
எழுப்பி விட்டுப் போகிறது
உள்ளே ஒளிந்திருந்த
மனக் குழந்தையை...//
மனம் இறுகிய தருணங்களில் எல்லாம் வீறு கொண்டு வெளிநடப்புச் செய்யும் மனக்குழந்தை மற்றக் குழந்தைகளோடு ஆடிக் களைத்து
மீண்டும் அகம் நுழையும்போது அதுவரை இல்லாத அமைதியும் ஆனந்தமும் உள்ளூறுமே...
அதற்கு ஈடு ஏது?
அருமையான கவிதை ரிஷபன் சார்.
azhakaana kavithai.anbaana vaazhthu.
nantriyum anbum...!
ஆண் பெண் பேதமற்று
பாச விரல்களை நீட்டி
‘வாழ்த்து’ சொல்லும்
ஒவ்வொரு முறையும்
தேவன் வருகிறார்
எனக்குள்ளும்
உனக்குள்ளும்
எல்லோருக்குள்ளும்..//
அருமையான வரிகள்.
என்றும் குழந்தையாய் இருக்கவே மனம் விரும்புகிறது.
நாமும் குழந்தையானால் மட்டுமே ஒரு குழந்தையை ரசிக்கவோ கொஞ்சவோ முடியும்.
. நம்முள் இருக்கும் குழந்தையை தட்டி எழுப்பும் இன்னொரு குழந்தை .
அருமையான கவிதை ரிஷபன் சார்.
அவ்வப்போது
தலை நீட்டும்
குழந்தையை
எப்போதும்
தொலைய விடாமல்
காப்பாற்றிக் கொள்வோம்..
இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்!
அருமையான வரிகள்..
நாம்தொலைத்த குழந்தையை தேடிப்பிடிப்போம் தங்கள் கவிதை உதவியுடன்..
பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..
anupavitheen rishaban. harani
அவ்வப்போது
தலை நீட்டும்
குழந்தையை
எப்போதும்
தொலைய விடாமல்
காப்பாற்றிக் கொள்வோம்..
முயன்றால் முடியாதது உண்டோ...?!
தொலைந்து விட்டதோ என நினைத்திருப்போம். ஆனால் அவ்வப்போது நமக்கே தெரியாமல் எட்டிப்பார்க்கும். அருமையான பதிவு.
Post a Comment