November 20, 2011

பல்ப்




பிறந்த நாட்களை நினைவு வைத்து வாழ்த்துகிற நல்ல பழக்கம் என்னைத் தவிர மற்ற எல்லோரிடமும் இருக்கு...

சரியாக 12.01 க்கு என்னை அழைத்து ’இனிய பிறந்த தின நல்வாழ்த்து’ சொன்ன சிநேகத்திற்கு பதில் மரியாதை செய்ய நினைச்சேன்..

அந்த நேரம் விழித்துக் கொண்டிருக்க் வேண்டியிருக்குமே..

இருக்கவே இருக்கு.. மொபைல்.. அலார்ம் வச்சு படுத்தாச்சு..

12.01.. செல் அலறிச்சு.. பர்ஸ்ட் எனக்குதான் ஏதோ அழைப்பு வருதாக்கும்னு தூக்கக் கலக்கத்துல நினைச்சுட்டு ‘சொல்லுங்க’னேன்.. அப்புறம் புரிஞ்சிது.. அது நான் வச்ச அலார்ம் தான்னு..

முதல்ல ‘ஹேப்பி பர்த் டே’ன்னு மெசேஜ்..

அப்புறம் ஹீரோ மாதிரி நெஞ்சை நிமிர்த்திகிட்டு கால் பண்ணேன்,.

எப்படி குஷியாகப் போறாங்க எதிர் முனைல.. என் வாய்ஸ் கேட்டு.. அதுவும் சர்ப்ரைசா..

“என்னப்பா”

“ஹேப்பி பர்த் டே.. டூ யூ..”

“லூசு.. இன்னிக்கு என்ன டேட்னு பாரு..”

ஆ.. மறுநாள் தான் பர்த் டே. நான் தப்பா தேதியை செட் பண்ணி கால் பண்ணிருக்கேன்..

“பேசாம தூங்கு..”

கப்சிப்.. கட் பண்ணி படுத்தாச்சு.. காலைல வீட்டுல அத்தனை பேர்கிட்டேயும் அதை உளறிட்டு காமெடி பீஸ் ஆயிட்டேன்..

“என்ன பல்ப் வாங்கினியா’ன்னு..

‘நல்லா சொதப்பின போ” இது ப்ரெண்டோட கமெண்ட்.

சாயங்காலம் போன் பண்ணி ‘இப்ப நினைச்சா கூட சிரிப்ப அடக்க முடியல’..

என் வரலாறுல இது இனிமே கல்வெட்டா நின்னுருச்சே!




18 comments:

ஷைலஜா said...

:):)கல்வெட்டுக்கு வாழ்த்தறதா வேண்டாமான்னு யோசனை:)

வெங்கட் நாகராஜ் said...

நல்ல பல்பு... அட்லீஸ்ட் சொல்ல முயற்சி பண்ணீங்களே... அதுக்காக பாராட்டணும்.... எனக்கும் உங்களைப் போலவே மறதி தான்.... கரெக்டா சொல்ல வேண்டிய அன்னிக்கு மறந்துடுவேன்....

Rekha raghavan said...

அடப் பாவமே!

கே. பி. ஜனா... said...

அட்வான்ஸ் வாழ்த்துக்கள்னு சொல்லி சமாளிச்சிருக்கலாமோ?

ஞாஞளஙலாழன் said...

“என்னைத் தவிர”...என்னை விட்டுட்டீங்களே

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

அட..பல்பா..பரவாயில்லையே? நானானா ட்யூப் லைட்டே வாங்கியிருப்பேன், அடுத்த இரண்டாம் நாள் அன்று பிறந்த நாள் வாழ்த்து சொல்லி!

RVS said...

பல்ப் என்பது தெருவிளக்கு.. எல்லோருக்கும் பொது...

இவ்வுலகத்தில் பல்ப் வாங்காதார் எவர் உலர்?

:-))

ராமலக்ஷ்மி said...

பாசத்தில் ஒளிர்ந்த பல்ப். பரவாயில்லை:)!

raji said...

ஹா...ஹா... சார்! நானாவது 40 வாட்ஸ்தான் வாங்கியிருக்கேன்.நீங்க 100 வாட்ஸ் போல இருக்கே!

'கல்வெட்டு' சூப்பர் :-))

Philosophy Prabhakaran said...

எனக்கும் யாருடைய பிறந்தநாளையும் ஞாபகத்தில் வைத்து வாழ்த்தி பழக்கமில்லை...

கீதமஞ்சரி said...

என்றும் மறக்கமுடியாத பிறந்தநாள் பரிசை அல்லவா தந்திருக்கீங்க! பிறகென்ன? வருத்தப்படாதீங்க ரிஷபன் சார்.

அப்பாதுரை said...

:)

உங்கள் பதிவைப் படித்திராவிட்டால் ஞாஞளஙலாழன் பற்றி அறியாமல் போயிருப்பேன்!!

இராஜராஜேஸ்வரி said...

என் வரலாறுல இது இனிமே கல்வெட்டா நின்னுருச்சே!/

அட்வான்ஸ் வாழ்த்துகள் ..
பிரகாசமான பல்புக்கு பாராட்டுக்கள்..

Unknown said...

இப்படி சொதப்பற நிறைய சமாச்சாரம் எல்லோர் லைஃப்லயும்
இருக்கவே செய்யுது ரிஷபன் ஜி. புன்முறுவல் பூக்கச்செய்தது இடுகை.

ஷர்புதீன் said...

இதுக்கெலாம் அஞ்ச கூடாது! ம் நடக்கட்டும்

ADHI VENKAT said...

//பர்ஸ்ட் எனக்குதான் ஏதோ அழைப்பு வருதாக்கும்னு தூக்கக் கலக்கத்துல நினைச்சுட்டு ‘சொல்லுங்க’னேன்.. அப்புறம் புரிஞ்சிது.. அது நான் வச்ச அலார்ம் தான்னு..//

நிஜமாவே சிரிச்சுட்டேன் சார்.

நல்ல பல்பு தான்.

G.M Balasubramaniam said...

இப்போதெல்லாம் ஃபேஸ்புக்கில் நண்பர்களின் பிறந்த நாட்களை நினைவு படுத்துகிறார்கள். புத்தாண்டு வாழ்த்து என்று இரவு மணி பனிரெண்டுக்கு வரும் வாழ்த்துக்கள் அன்புத் தொல்லைகளே. பிறந்த நாளில் வாழ்த்தப் பெற்றால் மகிழ்ச்சியடைவது நிஜம். ஒரு உபரி செய்தி என் பிறந்த நாளும் திருமண நாளும் ஒன்றே.அதனால் இரட்டை வாழ்த்து இரட்டை மகிழ்ச்சி. பல்ப் என்றால் தாமதமாகப் புரிந்து கொள்வது என்று எண்ணியிருந்தேன்.சரியில்லையோ.?

Sharmmi Jeganmogan said...

ரிஷபா.. உங்கள் நல்ல மனசுக்கு இதெல்லாம் தூசு என்று தட்டி விட்டுட்டு போயிட்டே இருங்க.

ஒரு ட்வுட்டு... அடுத்த நாள் சரியா வாழ்த்து சொன்னீங்களா?