November 27, 2011

மழைத் தொடர்பு


யார் என்ன சொன்னாலும்

என் மறதி குறித்த

கேலி விமர்சனங்களின் மீதே

கால் பதித்து நடந்து

குடையை மறந்து

வீட்டை விட்டு

என் பயணங்கள்..

எனக்கும் வானுக்குமான

மழைத் தொடர்பின்

ரகசியம்

சற்றே கிட்ட வரும்

இனிய நட்பிற்கு மட்டும்

காதோடு சொல்வேன்..

ஒரு முறை நனைந்து பார்த்தால்

பின் எந்த ஒரு நாளிலும்

வெளிக் கிளம்புமுன்

புத்தி குடையைத் தேடாது..

மனசின் ராகம் மட்டுமே

கேட்கும்

பெய்யும் மழையின் ஜதிக்கு.
19 comments:

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

அருமை. இப்படி மழையில் நனைந்தது கல்லூரிப் பருவத்தோடு சரி

மோகன் குமார் said...

//ஒரு முறை நனைந்து பார்த்தால்

பின் எந்த ஒரு நாளிலும்

வெளிக் கிளம்புமுன்

புத்தி குடையைத் தேடாது..//

அருமை

துரைடேனியல் said...

TM 1.

Ramani said...

ரசித்ததை ரசித்தபடி ரசிக்குபடி சொல்லிப்போகும் தங்கள்
படைப்பு அருமையிலும் அருமை
தொடர வாழ்த்துக்கள்
த.ம 2

G.M Balasubramaniam said...

மழையின் ஜதிக்கு இசையும் மனம்...கொடுத்து வைத்தவர் நீங்கள். ஒரு தூரல் விழும் முன்னே ஓடி ஒதுங்கும் ஜனங்களே இங்கு அதிகம்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

//மனசின் ராகம் மட்டுமே கேட்கும் பெய்யும் மழையின் ஜதிக்கு.//

அருமையான [கவிதை]மழையில் நானும் நனைந்தேன்.

வெளியே குடையுடன் போய் குடையைத்திரும்பக் கொண்டு வர மறந்துபோனால் சிலர் மனைவி குடைகுடையென்று குடைந்தெடுத்து விடுவாள்.

அது புயலுடன், இடியுடன் கூடிய மழைபோலல்லவா இருக்கும்!)))

தமிழ்மணம்: 3 Indli 2 Udance: 2
vgk

ராமலக்ஷ்மி said...

/ஒரு முறை நனைந்து பார்த்தால்

பின் எந்த ஒரு நாளிலும்

வெளிக் கிளம்புமுன்

புத்தி குடையைத் தேடாது..

மனசின் ராகம் மட்டுமே

கேட்கும்

பெய்யும் மழையின் ஜதிக்கு./

அருமை.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

அடுத்த இருபத்தி நாலு மணி கடக்கிற வரைக்கும் இந்த கவிதையின் தாக்கம் தான்!

வெங்கட் நாகராஜ் said...

அருமை.... மழையில் நனைந்து பார்த்தால் தான் அதன் அருமை புரியும்.... :)

நல்ல கவிதை....

raji said...

அருமை.இப்பவும் நனையப் பிடிக்கும்.

சிவகுமாரன் said...

பாரதி ஒருமுறை கொட்டும் மழையில் நனைந்து கொண்டே நடந்து போனாராம். ஏனப்பா சுப்பையா இப்படி செய்கிறாய் என்று கேட்டதற்கு , "அன்னை பராசக்தி அமுதமாய் பொழிகிறாள் . எல்லாம் வீணாய் போகிறது, வாரும். வந்து நனையுமய்யா" என்றாராம்.

நானும் மழை பெய்யும் போது ஞாபகமாய் குடையை மறந்து விட்டு போவேன்.

மகேந்திரன் said...

மழையின் சாரல் சந்தத்தில்
சுகராகம் பாடும் இன்னிசைக்கவி...

நிலாமகள் said...

மழையில் க‌த‌க‌த‌ப்பு குறையாம‌ல் வீட்டினுள் முட‌ங்கிக் கிட‌ப்ப‌தும் சுக‌மென்றாலும், போயே ஆக‌ வேண்டிய‌ வேலைக்கு சும்மாவேனும் ச‌லித்து, ச‌பித்து கிள‌ம்பினாலும், உள்ளூர‌ ந‌னைய‌க் கிடைக்கும் வாய்ப்புக்கு கும்மாள‌மாய் தானிருக்கிற‌து. சீச‌ன் காய்க‌னிக‌ளை ஆரோக்கிய‌த்துக்கு சாப்பிட‌ சிபாரிசு செய்யும் நாம் ம‌ழை, குளிர், வெயிலையும் அப்ப‌டியே அனுப‌விப்ப‌தும் ஆன‌ந்த‌மே. அவ‌ர‌வ‌ர் உட‌ல்நிலைக்குத் த‌க்க‌ முன்பின் ஏற்பாடுக‌ளையும் ச‌ற்று பார்த்துக் கொண்டால் போயிற்று.

சுந்தர்ஜி said...

மழைத்தாரையை அமுதமாய்ப் பருகும் சக்ரவாஹத்தின் ஜாதி நாமெல்லாம்.அதை பருகுவோர்க்குக் கவி சித்திக்கும்.களி பெருகும்.உன்மத்தம் பெருகும்.உம் கவிதையோடு சேர்ந்து இந்த வருடத்தின் கடைசி மழை இது.அது நம்மைவிட்டுச் செல்லும்முன் எல்லோரும் ஒருமுறை நனையக் கடவது.

கவி அழகன் said...

மழை கவிதை அருமை

கோமதி அரசு said...

ஒரு முறை நனைந்து பார்த்தால்

பின் எந்த ஒரு நாளிலும்

வெளிக் கிளம்புமுன்

புத்தி குடையைத் தேடாது..

மனசின் ராகம் மட்டுமே

கேட்கும்

பெய்யும் மழையின் ஜதிக்கு.//

மழை காலத்துக்கு ஏற்ற கவிதை
அருமை.

இயற்கை வைத்திய முறையில் மழையில் நனைவது நல்லது என்று சொல்கிறது.

ஷர்புதீன் said...

நனைய பிடிக்கும், முன்பெல்லாம் !

மாலதி said...

மிகவும் சரியான வரிகள் உணர்ந்தால் தான் இது புரியும் பாராட்டுகள்

Rishvan said...

அருமை ..... www.rishvan.com