November 22, 2011

க.மு., க.பி.


புதிதாய் வேலைக்கு சேர்ந்தவர்களுடன் செக்க்ஷன் அதிகாரி பேசிக் கொண்டிருந்தார்.

வந்தவர்களின் பெயர், படிப்பு, ஆர்வம் எல்லாம் விசாரித்தபின் 'உங்களுக்கு எதுவும் கேட்கணுமா' என்றார்.

ஒரு கை உயர்ந்தது.

என்ன கேட்கப் போகிறானோ என்கிற ஆர்வம். 'ம். கேளு'

"கல்யாணத்துக்கு எத்தனை நாள் லீவு கொடுப்பீங்க"

ஒரு பேட்ச்சாய் வேலைக்கு வருகிறவர்களில் ஒவ்வொருவராய் கல்யாணப் பத்திரிக்கை கொடுக்க ஆரம்பித்ததும் மிச்சம் இருக்கிறவர்கள் பாடு திண்டாட்டம்தான்.

'என்னப்பா.. இன்னும் உங்க வீட்டுல பார்க்க ஆரம்பிக்கலியா' என்று கேள்வி கேட்டே வெறுப்பேற்றி விடுவார்கள்.

இன்னும் மாட்டாம சுத்திகிட்டு இருக்கான்பா ஜாலியா என்று நக்கல் அடித்தாலும் கல்யாணம் என்றால் தலையை சுற்றி ஒரு ஒளிவட்டம்.. கால்கள் தரையில் பாவாமல் மிதக்கிற அனுபவம் எல்லாம் வந்து விடுகிறது.

அதிலும் லவ் மேட்டர் என்றால் கேட்கவே வேண்டாம்.. மந்திரிச்சு விட்ட கோழி தான் (அப்படின்னா என்னன்னு தெரியாம யூஸ் பண்ணிட்டேன்..கோழிக்கு எதுக்கு மந்திரிக்கணும்)

எங்கள் அலுவலகத்தில் கடந்த இரண்டு வருடமாய் (அதாவது எனக்குத் தெரிந்தபின் 2 வருடம்.. அதற்கு முன் எப்போதோ) ஒன்றாய் கேண்டீனில் சாப்பிட வந்து திரும்பிப் போகிற ஜோடி ஒன்று உண்டு.

இரு வீட்டிலும் இன்னும் சம்மதம் தரவில்லை. இவர்களும் பொறுமையாய் காத்திருக்கிறார்கள்.

பெண்ணின் தலைமுடி ஒன்றிரண்டு வெளுக்கவே ஆரம்பித்து விட்டது.

இருவரும் வெவ்வேறு பகுதியில் பணி. ஒரு பாயிண்ட்டில் சந்தித்து, கேண்டீனில் ஒன்றாய் சாப்பிட்டு பின் அவளிடத்தில் கொண்டு போய் விட்டு விட்டு போவான்.

மானசீகமாய் நான் 'சீக்ரமேவ விவாஹ ப்ராப்தி ரஸ்து' சொல்லிக் கொண்டிருக்கிறேன்.

இன்னொரு ஜோடி காதல் திருமணம்தான். அதற்கு முன்பு வரை இயல்பாய் அரட்டை அடித்துக் கொண்டிருந்தவன் இப்போது அவளைத் தவிர வேறு யாரிடமும் பேச மறுக்கிறான்.

''என்னடா பண்ணா அவ.. பய மந்திரிச்சு விட்டா மாதிரி அவ பின்னாலேயே போறான்'

ம்ஹூம். அவன் பேசவே தயாராய் இல்லை. குனிந்த தலை நிமிராமல் எங்களை கடந்து போய் விடுவான்.

கல்யாணத்துக்கு எத்தனை நாள் லீவு தருவீங்கன்னு கேட்டவன் இன்று வந்து ஸ்வீட் கொடுத்தான். மேரேஜ் பிக்ஸ் ஆயிருச்சாம். எப்ப லீவுல போகப் போறேன்னு கேட்டதும் அப்படி ஒரு வெட்கம் முகத்தில். (ஆமா.. இப்பல்லாம் பசங்கதான் ரொம்ப வெட்கப் படறாங்க போல)

கல்யாணம் ஆனவங்களை கேட்டா அது வேஸ்ட்னு டென்ஷன் ஆவுறாங்க.

என் ப்ரெண்ட் மதியம் கேரியர் பிரிச்ச உடனே மூஞ்சி போகற போக்கே சகிக்காது.. செம வெறுப்பா சாப்பிட ஆரம்பிப்பார்.

ஒரு நாள் வாங்கி டேஸ்ட் பார்த்தேன். நல்லாத்தான் இருந்திச்சு. ஆனா என்ன அனுப்பினாலும் அவர் மூஞ்சி சுளிப்பாரு.

ம்ம்.. இதோ இன்னொரு ப்ரெண்ட் வரான்.. பிக்ஸ் ஆயிருச்சாம்.. மொபைல்ல போட்டோ காட்டறான்.. அதுக்குள்ள கால் வருது.. ஜன்னலுக்கு வெளியே தலைய நீட்டி ஏதோ கீழே குதிக்கப் போறவன் மாதிரி டவர் கிடைக்காம பேசுறான்.. இனிமே இவனும் ஒழுங்கா பேச மாட்டான் .. மெசெஜ்.. கால்னு திசை மாறிடுவான்..

க.மு., க.பி.ன்னு அதாவது கல்யாணத்துக்கு முன், கல்யாணத்துக்கு பின் என்று இரு முகங்களா.. இவர்களுக்கு?

புது பேட்ச்ல ஏதாச்சும் ப்ரெண்ட் கிடைக்குதான்னு பார்க்கணும்..


18 comments:

அப்பாதுரை said...

:)
காதல் கிடைத்ததும் நண்பர்களைக் கைவிட்ட அனுபவம் நினைவுக்கு வந்தது.

"என் ராஜபாட்டை"- ராஜா said...

/க.மு., க.பி.ன்னு அதாவது கல்யாணத்துக்கு முன், கல்யாணத்துக்கு பின் என்று இரு முகங்களா.. இவர்களுக்கு?
//
உங்களுக்கும் அந்த நிலை வரும் தலைவா ..
அன்புடன் :
ராஜா

நெருப்பு நரியுடன்(FIREBOX) சில விளையாட்டுகள்.

வெங்கட் நாகராஜ் said...

க.மு., க.பி. இரண்டுமே இரண்டு எக்ஸ்ட்ரீம் :) எனக்கும் இது போல அனுபவங்கள் உண்டு... கல்யாணத்துக்கு முன் வரை நல்ல நண்பராக இருந்து பின்னர் அப்படியே மாறிவிடுகிறார்கள்.... :)

அம்பாளடியாள் said...

நகைச்சுவை கலந்து சிந்திக்க வைத்த அருமையான படைப்பு .வாழ்த்துக்கள் சகோ மிக்க நன்றி பகிர்வுக்கு..

வானம்பாடிகள் said...

=))

ஹேமா said...

க.மு,க.பி...புரிஞ்சுபோச்சு !

middleclassmadhavi said...

Aankalukkum ithu porunthum ena therinthu konden! :-))

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

எல்லோரும் இப்படித்தான்

அமைதிச்சாரல் said...

//க.மு., க.பி.ன்னு அதாவது கல்யாணத்துக்கு முன், கல்யாணத்துக்கு பின் என்று இரு முகங்களா.. இவர்களுக்கு?//

ஜூப்பர் :-))

வை.கோபாலகிருஷ்ணன் said...

//கல்யாணம் ஆனவங்களை கேட்டா அது வேஸ்ட்னு டென்ஷன் ஆவுறாங்க.//

//அதுக்குள்ள கால் வருது.. ஜன்னலுக்கு வெளியே தலைய நீட்டி ஏதோ கீழே குதிக்கப் போறவன் மாதிரி டவர் கிடைக்காம பேசுறான்..//

அருமையான நகைச்சுவைப் பதிவு.
பாராட்டுக்கள்.

udance 4, Tamilmanam 5, indli 5
vgk

ஷர்மி said...

என் வீட்டுக்காரர் ஒரே சொல்வார், நான் தான் அவரைத் தன் நண்பர்களிடமிருந்து பிரித்து விட்டேன் என்று. கல்யாணம் கட்டிய புதிதில் மனைவியே கதி என்று கிடந்துவிட்டு, 12 வருஷம் கழித்து வந்து குறை சொன்னால் என்ன செய்ய முடியும்? நட்பை தொடர்வதெல்லாம் ஆண்கள் கையில் தான் இருக்கு.

இராஜராஜேஸ்வரி said...

மானசீகமாய் நான் 'சீக்ரமேவ விவாஹ ப்ராப்தி ரஸ்து' சொல்லிக் கொண்டிருக்கிறேன்.

வாழ்த்துகள்..!!

கணேஷ் said...

ஆண்களாவது க.பி. மோகம் தணிந்தபின் நண்பர்களுடன் மீண்டும் ஒட்டிக்கொண்டு நட்பைத் தொடர வாய்ப்புகள் அதிகம். பெண்களின் நிலை பாவம்தான்... க.மு, க.பி.யை மிக ரசித்தேன். அருமை சார்...

கோவை2தில்லி said...

ரசித்தேன்...:)))

கே. பி. ஜனா... said...

க.மு: போர்!
க.பி.: உற்சாகம்!
(க.மு: கதை படிக்கு முன்
க.பி.: கதை படித்த பின்)

RVS said...

க.மு... க.பி மாதிரி கா.மு... கா.பி என்று இருவேறு உலகங்களும் உண்டு சார். :-))

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

இப்ப சார் சொல்றாப்ல, நிறைய கல்யாணம் வருது!அதுல என்ன சந்தோஷமோ..அவனவன் வாயெல்லம் பல்லாய்!
என் கல்யாண நாளிலும் சரி..இப்போதும் சரி..வாயை மூடிக் கொண்டு தான் இருந்தேன்..இவர்கள் போல் பல்லை காட்டுவதில்லை..
எனக்கும் பல் காட்ட ஆசை தான்..அறுபதாம் கல்யாணம் வரப் போகிறது..
பல்லிருக்குமா என்பதே என் கவலை!

நிலாமகள் said...

ப‌திவு முழுவ‌தும் துள்ளும் இள‌மை வ‌சீக‌ரிக்கிற‌து.