November 09, 2011

சிறு பிள்ளை


சிறு தூறலோ..
பெரு மழையோ..
பொழியும் போதெல்லாம்
ஆச்சர்யப்படுத்திக்
கொண்டிருக்கிறாய் நீயும்..
அந்த வானத்தைப் போலவே.
அன்பில் நனைவதைத் தவிர
வேறேதும்
செய்வதறியா
சிறு பிள்ளையாய் நான் !


ஒரு கவிதைக்கான
சாலையை
செப்பனிட்டுக் கொண்டிருக்கிறது
எண்ணம்.
இரு புறமும்
இயல்பாய் பூத்து
குலுங்கிக் கொண்டிருந்தன
முன்னாட்களில்
நடப்பட்ட செடிகள் !


23 comments:

Yaathoramani.blogspot.com said...

மழை நாளில் மனது குளிர்வதையும்
கற்பனையில் விழுந்து புரண்டு
கவிதைகள் வடிப்பதையும்ம்
நேர்த்தியாகச் சொல்லிப் போகிறது பதிவு
பூத்துக் குலுங்குகிறது என்றோ நட்ட செடி என்பது
அருமையான படிமம்
அருமையான படைப்பு
தொடர வாழ்த்துக்கள்
த.ம 1

Sharmmi Jeganmogan said...

நல்ல எழுத்து நடை ரிஷபன். மழைக்காலம் உங்கள் எழுத்தைத் தூண்டுகிறதோ...?

G.M Balasubramaniam said...

எண்ணங்கள் சாலையானால், முன்னாளில் நடப்பட்ட செடிகள் அனுபவங்களா.?

வெங்கட் நாகராஜ் said...

நல்ல படைப்பு...

மழை நாளில் தான் என்னதொரு ஆனந்தம்....

கும்மாச்சி said...

ரிஷபன் நல்ல கவிதை, வாழ்த்துகள்.

settaikkaran said...

சாரலில் நனைந்த உணர்வு!

vasu balaji said...

Loved it:D

துரைடேனியல் said...

Manathukkul Saaral adikkirathu.

Philosophy Prabhakaran said...

காதல் வந்தாள் கவிதை வரும்ன்னு சொல்லுவாங்க... உங்களுக்கு மழை வந்தாலே கவிதை வருகிறது... ஒருவேளை மழையின் மீது காதலோ...

ஹேமா said...

எண்ணங்களில் முன்னாள் நடப்பட்ட செடிகள்.அருமை !

ஷைலஜா said...

//ஒரு கவிதைக்கான சாலையைசெப்பனித்துக் கொண்டிருக்கிறதுஎண்ணம்.இரு புறமும்இயல்பாய் பூத்துகுலுங்கிக் கொண்டிருந்தனமுன்னாட்களில்நடப்பட்ட செடிகள்/


ஆஹா அருமையான சிந்தனை ரி.

கவி அழகன் said...

Vothiyaaamana kavi valthukal

வை.கோபாலகிருஷ்ணன் said...

தமிழ்மணத்தில் 10 out of 10 Marks போடும் வாய்ப்பு கிடைத்ததற்கு பெரு மகிழ்ச்சி அடைந்தேன்.

நல்ல அழகிய கவிதை. மழைச் சாரலில் நனைந்த குதூகலம் ஏற்பட்டது. vgk

ஹ ர ணி said...

எதார்த்தம் மிளிரும் கவிதை. நல்லா இருக்கு. துர்றல் என்பதுதான் சரி ரிஷபன்.

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

//ஒரு கவிதைக்கான
சாலையை
செப்பனித்துக் கொண்டிருக்கிறது
எண்ணம்.
இரு புறமும்
இயல்பாய் பூத்து
குலுங்கிக் கொண்டிருந்தன
முன்னாட்களில்
நடப்பட்ட செடிகள்//

எனக்கு மிகப் பிடித்திருந்த வரிகள் இவை.கவிதைகள் முளைவிடும் ஒரு வார்த்தையோ ஒரு சம்பவமோ இன்ப வேதனைதான் ரிஷபன்.

Unknown said...

// ஒரு கவிதைக்கான சாலையைசெப்பனித்துக் கொண்டிருக்கிறதுஎண்ணம்.இரு புறமும்இயல்பாய் பூத்துகுலுங்கிக் கொண்டிருந்தனமுன்னாட்களில்நடப்பட்ட செடிகள் !//


சிந்தனை சிதறல்களை
செப்பனிட முந்தய கவிதைச்
செடிகளில் முத்து மலர்கள்
பூத்துக் குலுங்கினவோ!
அழகு!

புலவர் சா இராமாநுசம்

middleclassmadhavi said...

மழை இன்னும் பொழியட்டும்! கவிதைகள் அறுவடை செய்ய!!

ரிஷபன் said...

நன்றி ஹரணி.
சரி செய்து விட்டேன்

கே. பி. ஜனா... said...

அற்புதமான மழை உங்கள் இந்தக் கவிதை

சிவகுமாரன் said...

கவிதைக்கான சாலை .
எண்ணச் செடிகள்.
..
ஆகா
பரந்து விரியும் கற்பனை.

RVS said...

சிவகுமாரன், ரமணி, சுந்தர்ஜி, ஹேமா போன்ற கவிஞர்கள் கருத்திட்டபின் அதிகப்பிரங்கியாக நானேதும் சொல்வதற்கில்லை. என் மொழியில் சொல்வதென்றால் ”தூள்!!” :-)

அன்புடன் நான் said...

கவிதை மிக அழகியல்

உலக சினிமா ரசிகன் said...

உங்கள் கவிதை இயற்கை அழகு ததும்பி வழிகிறது.

குண்டாய் இருக்கும் பெண்ணின் அக உளைச்சல்களை மிக அற்ப்புதமாக படமாக்கி உள்ளார் ஒரு பெண் இயக்குனர்.
ஆண் இயக்குனர்கள் தொட முடியாத உயரத்தில் காட்சிகள் அமைந்துள்ள
FAT GIRL என்ற படத்திற்க்கு பதிவிட்டுள்ளேன்.
வருகை புரிந்து கருத்துரைக்கவும்.