November 23, 2011

மாற்றம்





’என்னப்பா.. ஏன் டல்லா இருக்கே’

‘.....’

‘ப்ச்.. சொல்லுப்பா.. நீ ஆசைப்பட்ட மாதிரி சென்னைல வேலை அப்புறம் என்ன’

‘உன்னை விட்டு போகணுமே’

ஆனந்த் சிரித்தான்.

‘ஏம்பா.. நீதான் அவ்வளவு ஆசையா இண்டர்வியூ அட்டெண்ட் பண்ணே.. இந்த வேலைல சேர உனக்கு அவ்வளவு இண்ட்ரெஸ்ட்.. இப்ப கிடைச்சதும் மூஞ்சிய தூக்கி வச்சுக்கிற’

‘கிடைக்காதுன்னு நினைச்சேன்..’

‘அட.. லூசு’

‘உண்மையா.. இப்ப உன்னை விட்டு போகணுமே’

‘சென்னை என்ன வெளிநாடா.. நைட் பஸ் ஏறினா மார்னிங் உன் முன்னால’

‘உனக்கு கஷ்டமா இல்லியா’

‘ம்ம்’

ஆனந்த் யோசித்தான். இப்பதான் மெல்ல மெல்ல அரும்பிய காதல். ஆனால் வித்யா ஆசைப்பட்ட மாதிரி வேலை.

கொஞ்ச நாளாச்சும் நான் வேலைக்கு போகணும். என் இஷ்டத்துக்கு இருக்கணும்.

சொல்லிக் கொண்டே இருப்பாள்.

இப்போது கிடைத்ததும் அப்செட்! ஆனந்தை விட்டு பிரிய வேண்டுமே என்று.

‘போப்பா.. அப்புறம் பிடிக்கலேன்னா விட்டுட்டு வந்திரலாம்’

போன முதல் வாரமே வீக் எண்டில் வந்து விட்டாள். சனி ஞாயிறு பொழுது ஓடியதே தெரியவில்லை.

அடுத்த வாரம் அவன் போனான். பீச்சில் அமர்ந்து இருட்டும் வரை பேசிக் கொண்டிருந்தார்கள்.

தினமும் போன். காலை வணக்கம் சொல்வதிலிருந்து அவ்வப்போது மெசேஜ்.

‘மதியம் சாப்பாடு எங்க சாப்பிடுற..’

‘எங்க ஆபீஸ் கேண்டீன்ல..’

‘நல்லா இருக்குமா’

‘சூப்பரா இருக்குப்பா’

‘ப்ரெண்ட்ஸ் கிடைச்சாங்களாப்பா’

‘எனக்கு யார்கிட்டேயும் பேசப் பிடிக்கலப்பா’

‘ஏய் .. அப்புறம் உனக்குத்தான் ரொம்ப போர் அடிக்கும்’

‘சாப்பிட போகும் போது உமான்னு ஒருத்தி கூட வருவா’

‘ஓ..’

இரண்டு மாசம் ஓடியது.

‘இந்த ஸாடர்டே வரலப்பா.. ஆபீஸ் வரச் சொல்லிட்டாங்க’

’ஓக்கே..’

இன்னொரு மாசம்..

இப்போதெல்லாம் ஆபீஸ் பற்றி அலுப்பு தெரிவதில்லை அவள் பேச்சில்.

‘வொர்க் பிடிச்சுப் போச்சாப்பா’

‘ம்.. நல்லா இருக்கு’

‘ரொம்ப ஓவர் லோடா’

‘சேச்சே.. அதெல்லாம் இல்ல.. எனக்கு கொஞ்சம் அதிகமா இருந்தாக் கூட தியாகுவும் வின்செண்ட்டும் ஹெல்ப் பண்றாங்க..’

‘யாரு..’

‘ஆபீஸ்லயே இவங்க ரெண்டு பேரும்தான் எனக்கு ரொம்ப பிடிச்சவங்க.. உமா இப்பல்லாம் என் கூட சாப்பிட வரதில்ல.. நான் தியாகு, வின்செண்ட் கூட சாப்பிட போயிருவேன்பா.’

‘ம்ம்.. இந்த வீக் எண்ட் வரட்டுமாப்பா’

‘இல்லப்பா.. சனிக்கிழமை ஆபீஸ் போனாலும் போவேன்.. ‘

‘ஓ.. எல்லாரும் வராங்களா’

‘சேச்சே.. தியாகு மட்டும் வருவார்.. ‘

‘ஓ..’

‘ஒக்கே.. நான் அப்புறம் பேசறேன்.. ஏதோ கால் வருது..’

அன்றிரவு அவன் அனுப்பிய குட் நைட் மெசெஜுக்கு இரவு பனிரண்டு மணி வரை விழித்திருந்தும் பதில் வரவில்லை.







18 comments:

வெங்கட் நாகராஜ் said...

நல்ல மாற்றம்!

அது சரி மாற்றம் ஒன்றுதானே மாறாதது.....

வை.கோபாலகிருஷ்ணன் said...

மாற்றம் மிகவும் யதார்த்தமானது என்பதை மிக அழகாகவே சொல்லிவிட்டீர்கள்.

தமிழ்மணம்: 2
இண்ட்லி: 3
உடான்ஸ்: 3
vgk

ஷைலஜா said...

பாவம் .. சே!

துரைடேனியல் said...

Nice.
TM 3.

Unknown said...

தலைப்புக்கு ஏற்ற கதையா!?
கதைக்கு ஏற்ற தலைப்பா!?
எப்படி வைத்துக் கொண்டாலும்
அதில் மாற்றம் ஏதுமில்லை
நல்ல, இன்றைய நடைமுறை
நிகழ்வுகளுக்கு ஏற்ப சொல்லப்
பட்டுள்ளது நன்றி!

த ம ஓ 1

புலவர் சா இராமாநுசம்

நிலாமகள் said...

ச‌ந்த‌ர்ப்ப‌ சூழ‌ல்... ? ப‌ச்சோந்தி...? க‌லிகால‌த்தின் கோல‌ம்!

மனோ சாமிநாதன் said...

சரளமான நடையில் யதார்த்த உலகை அழகாக காட்டியிருக்கிறீர்கள்!!

RVS said...

ஆனந்திற்கு ஏமாற்றம். :-)

கே. பி. ஜனா... said...

//அன்றிரவு அவன் அனுப்பிய குட் நைட் மெசெஜுக்கு இரவு பனிரண்டு மணி வரை விழித்திருந்தும் பதில் வரவில்லை.//
எதிர்பார்த்தானா என்ன?

மகேந்திரன் said...

மாற்றத்தை அருமையாச் சொல்லியிருகீங்க நண்பரே...

raji said...

வலி தரும் மாற்றம்

Sharmmi Jeganmogan said...

நல்லவேளை கல்யாணத்திற்கு முன்னரே மாறிவிட்டாள்...

பால கணேஷ் said...

நகரத்தின் பரபரப்பு, பணத்தின் வசதி எல்லாம்தான் இந்த வேதனை தரும் மாற்றத்தின் ஆதாரசுருதி. அழகாக சின்னக் கதை மூலம் உணர்வுகளை எங்களுக்குக் கடத்தியிருக்கிறீர்கள். அருமை ரிஷபன் சார்!

இராஜராஜேஸ்வரி said...

அன்றிரவு அவன் அனுப்பிய குட் நைட் மெசெஜுக்கு இரவு பனிரண்டு மணி வரை விழித்திருந்தும் பதில் வரவில்லை.


மாற்றத்தை உணர்த்திய
நிதர்சன் வரிகள்!

அப்பாதுரை said...

இதுவும். இன்னமும். இயல்பே.
கதையை ரசித்தேன்.

Anonymous said...

கேடு கெட்ட மாற்றம்..இப்படி தான் நிறைய மாற்றம்... என்னவோ பண்ணுது மனசை..

ADHI VENKAT said...

பாவம் ஆனந்த் :(

CS. Mohan Kumar said...

சார் உங்க சிறு கதை தொகுப்பு வந்துடுச்சா? இல்லாட்டி சீக்கிரம் ஏற்பாடு பண்ணுங்கள் சார். சென்னையில் இதுக்காக நான் யாரிடமாவது பேசணும்னா சொல்லுங்க